17 வருடம்.. தல தோனி செய்யாத சாதனை.. சிஎஸ்கே வரலாற்றில் ருதுராஜ் புது ரெக்கார்ட்

0
231
Ruturaj

நடப்பு 17வது ஐபிஎல் சீசனில், இன்று 39ஆவது போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். எட்டு போட்டிகளில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் 7 போட்டிகளில் டாஸ் தோற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லக்னோ அணியில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்தரா வெளியில் அனுப்பப்பட்டு, டேரில் மிட்சல் கொண்டுவரப்பட்டார்.

- Advertisement -

இந்த முறை சிஎஸ்கே அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக ரகானே உடன் கேப்டன் ருதுராஜ் வந்தார். ரகானே 3 பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்து கேஎல்.ராகுலின் அபாரமான கேட்ச் மூலம் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் டேரில் மிட்சல் அனுப்பப்பட்டார்.

சிஎஸ்கே அணிக்கு இரண்டாவது விக்கெட்டுக்கு 26 பந்தில் 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. டேரில் மிட்சல் 10 பந்தில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து இந்த முறையும் ஏமாற்றம் தந்தார். இதற்கு அடுத்து சிவம் துபே இடத்தில் மீண்டும் ரவீந்திர ஜடேஜா அனுப்பப்பட்டார். இந்த ஜோடி 32 பந்தில் 52 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 19 பந்தில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த இரண்டு பார்ட்னர்ஷிப்பிலுமே கேப்டன் ருதுராஜின் பங்களிப்பே பெரிதாக இருந்தது.

இதற்கு அடுத்து ருதுராஜ் மற்றும் சிவம் துபே ஜோடி சேர்ந்தார்கள்.இதன்பிறகு சிக்ஸர்கள் வர ஆரம்பித்தது. சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 56 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் அபாரமாக சதம் அடித்தார். அவருடன் இணைந்து விளையாடிய சிவம் துபே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து 27 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 47 பந்துகளில் 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.

- Advertisement -

இதையும் படிங்க : இம்பேக்ட் பிளேயர் ரூல்.. சிஎஸ்கே போட்டிருக்கும் மாஸான மாஸ்டர் பிளான்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

இறுதி வரை களத்தில் நின்ற கேப்டன் ருதுராஜ் 60 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 108 ரன்கள் குவித்தார். ஒரு பந்து மட்டுமே ஆட வாய்ப்பு கிடைத்த மகேந்திர சிங் தோனி அதை பவுண்டரி அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்து இருக்கிறது. லக்னோ தரப்பில் மேட் ஹென்றி நான்கு ஓவர்களுக்கு 28 ரன் மட்டும் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். மேலும் ருத்ராஜ் இன்று சதம் அடிப்பதன் மூலம் சிஎஸ்கே அணிக்காக சதம் அடித்த முதல் கேப்டன் என்கின்ற பெருமையை பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு தோனி கேப்டனாக அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்திருந்தார்.