இம்பேக்ட் பிளேயர் ரூல்.. சிஎஸ்கே போட்டிருக்கும் மாஸான மாஸ்டர் பிளான்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

0
224
CSK

இன்று ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இம்பேக்ட் பிளேயர் விதியை பயன்படுத்த சிஎஸ்கே அணி சிறப்பான திட்டத்தை வகுத்திருக்கிறது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் பனிப்பொழிவை முன்வைத்து முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்திருக்கிறார். மேலும் சிஎஸ்கே அணிக்கு எதிராக கடந்த போட்டியில் விளையாடிய லக்னோ அணி அப்படியே களம் இறங்கி இருக்கிறது. மயங்க் யாதவ் காயம் இன்னும் சரி அடையவில்லை என்று தெரிகிறது.

- Advertisement -

அதே சமயத்தில் சிஎஸ்கே அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. துவக்க இடத்தில் தடுமாறி வரும் ரச்சின் ரவீந்தரா நீக்கப்பட்டிருக்கிறார். அவருடைய இடத்திற்கு டேரில் மிட்சல் கொண்டுவரப்பட்டிருக்கிறார். ரகானே ருதுராஜ் துவக்க வீரர்களாக வர, மிட்சலுக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு இந்த இடம் மிகவும் வசதியான ஒன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய அணியின் ப்ளேயிங் லெவனில் சமீர் ரிஸ்வி சேர்க்கப்படவில்லை. வழக்கமாக இம்பேக்ட் பிளேயர் விதியை சிஎஸ்கே அணி புத்திசாலித்தனமாக பயன்படுத்தவில்லை. எனவே சமீர் ரிஸ்வியை வழக்கமாக உள்ளே வைத்து, மதிஷா பதிரணாவை இம்பேக்ட் பிளேயராக வெளியில் வைப்பார்கள்.

இதையும் படிங்க: பங்களாதேஷை விட சிஎஸ்கேவுக்கு விளையாடறதையே முஸ்தபிசுர் என்ஜாய் பண்றாரு.. காரணம் இதுதான் – சோரிஃபுல் இஸ்லாம் பேட்டி

- Advertisement -

தற்பொழுது சமீர் ரிஸ்வியை வெளியில் வைத்து, மதிஷா பதிரணாவை முதலில் பேட்டிங் செய்யும்பொழுது உள்ளே வைத்திருக்கிறார்கள். இதன் காரணமாக பேட்டிங் செய்வதற்கு சமீர் ரிஸ்வி இன்று தேவைப்படாவிட்டால், அவருடைய இடத்தில் ஒரு இந்திய பந்துவீச்சாளரை பந்து வீசும் பொழுது உள்ளே கொண்டு வரலாம். உதாரணமாக சர்துல் தாக்கூரை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இம்பேக்ட் பிளேயர் விதியில் 7 போட்டிகளாக சிஎஸ்கே செய்து வந்த தவறை தற்போது திருத்திக் கொண்டிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.