“21 வயசுலயே பண்ணிட்டேன்.. ரன்தான் எப்பவும் முக்கியம்” – ஸ்டோக்ஸ்க்கு குக் பதிலடி

0
172
Cook

இந்த நூற்றாண்டில் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற கடைசி அணியாக அலைஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணியே இருக்கிறது.

இங்கிலாந்து அணியின் 2012 ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் போது, பேட்டிங் யூனிட்டில் கேப்டன் குக் மற்றும் பீட்டர்சன் அபாரமாக செயல்பட, பவுலிங் யூனிட்டில் சுழற் பந்துவீச்சாளர்கள் ஸ்வான் மற்றும் பனேசர் இருவரும் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடிக்க, இங்கிலாந்து 2-1 என தொடரை வென்றது.

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடர் வெற்றி இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்பொழுதும் மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. அதற்குப் பிறகு தற்பொழுது இங்கிலாந்து அணி முதல் டெஸ்டில் வெற்றி பெற்று இருப்பது இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கிய இடத்தை பெற்று இருக்கிறது.

அலைஸ்டர் குக் இங்கிலாந்து கிரிக்கெட்டின் ஒரு கௌரவம் மிக்க வீரராக பார்க்கப்படுகிறார். தற்பொழுது இங்கிலாந்துக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக அவரே இருக்கிறார்.

அவர் 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 12,472 ரன்களை, 45 35 என்ற சராசரியில் குவித்திருக்கிறார். இவரது சாதனை ஒரு இங்கிலாந்து பேட்ஸ்மேனால் உடைக்கப்படும் என்றால், அது தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் ஜோர் ரூட்டால் மட்டுமே முடியும். அவர் இதை முறியடிக்கும் அருகில் இருக்கிறார்.

- Advertisement -

ஒரு சமயத்தில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசும் பொழுது, தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டை தாங்கள் அதிரடியாக விளையாடும் முறையின் காரணமாக, குக் தங்கள் அணிக்கு வந்து விளையாட விரும்ப மாட்டார் என்று கூறியிருந்தார்.

முதல் டெஸ்ட் போட்டி மற்றும் ஸ்டோக்ஸ் கருத்து குறித்து பேசி உள்ள குக் கூறும் பொழுது “நான்காவது இன்னிங்ஸில் இலக்கை எப்படி துரத்துவது என்றும் அல்லது இங்கிலாந்தின் திட்டங்களை முறியடிப்பது எப்படி? என்றும் இந்திய அணிக்கு புரியவில்லை. இது அவர்களை உலுக்கி விட்டது. இந்தியா உள்நாட்டில் கடைசி 40 போட்டிகளில் மூன்றை மட்டுமே தோற்று இருக்கிறது.

இங்கிலாந்து இரண்டாம் நாள் முடிவில் என்ன நிலையில் இருந்தார்கள் என்று பார்க்கும் பொழுது, பொதுவாகவும் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். மேலும் இந்தியாவில் இந்திய அணியை டெஸ்ட் போட்டியில் தோற்கடிப்பது எவ்வளவு கடினம் என்று எங்களுக்கு தெரியும்.

இதையும் படிங்க : “இங்கிலாந்து அணிக்கு எதிரா ரோகித் சர்மா பிளான் வச்சிருக்கார்.. அது இதுதான்” – ரிஷப் பண்ட் தகவல்

ஸ்டோக்ஸ் அப்பொழுது கூறியிருந்த கருத்துப்படி பார்த்தால், எப்படி விளையாடினாலும் ரன்கள்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் முக்கியத்துவமானது. ஒரு வீரர் அறிமுகமாகி ரன்களை குவிக்கும் பொழுது, அவர் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார். நான் 21 வயதில் அறிமுகமான பொழுது நான் நிறைய ரண்களை எனது வழியில் விளையாடியே குவித்தேன். ரன்தான் எப்பொழுதும் முக்கியமானது” என்று கூறி இருக்கிறார்.