“இங்கிலாந்து அணிக்கு எதிரா ரோகித் சர்மா பிளான் வச்சிருக்கார்.. அது இதுதான்” – ரிஷப் பண்ட் தகவல்

0
305
Pant

கடந்த இரண்டு வருடங்களில் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் அதிரடியான முறையில் அணுகி வருகிறது. அவர்களின் இந்த அணுகுமுறைக்கு பாஸ்பால் என பெயரிடப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்தின் எல்லா பேட்ஸ்மேன்களும் சூழ்நிலையைப் பற்றி பெரிய அளவில் கவலைப்படாமல் அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாடுவதில் தங்களது கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

இப்படி விளையாடுவதற்காக அவர்கள் நிறைய ஆபத்தான ஷாட்களை பயிற்சி செய்து அதில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இதன் காரணமாக பந்துவீச்சாளர்கள் லென்த்தை மாற்ற வேண்டிய கட்டாயமும், கேப்டனுக்கு பில்டிங் செட்டப்பை வைப்பதில் பெரும் சிரமமும் உண்டாகி வருகிறது.

இங்கிலாந்தின் இந்த அதிரடியான டெஸ்ட் அணுகுமுறையை நீண்ட நாட்களுக்கு முன்பே இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் தனி ஒரு வீரராக செய்து காட்டி இருந்தார். அவர் ஒருவர் கொடுத்த தாக்கமே இந்திய அணி ஆஸ்திரேலியாவை இளம் வீரர்களை வைத்து, அவர்கள் நாட்டிலேயே காபா டெஸ்டில் வீழ்த்தி அசத்தமுக்கிய காரணமாக இருந்தது.

அவர் எந்த நாடுகளுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினாலும், அந்த அணியின் கேப்டன் மற்றும் வீரர்கள் அவரது அணுகுமுறை குறித்து எப்பொழுதும் வியப்பாகவும் பாராட்டியும் பேசி வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் இந்திய அணி பயிற்சியில் இருந்த பொழுது ரிஷப் பண்ட் இந்திய அணியினரை சந்தித்து பேசியிருந்தார்.

- Advertisement -

அப்படியான சந்திப்பின்போது ரோகித் சர்மா இங்கிலாந்தின் அதிரடியான பாஸ்பால் முறைக்கு, தானும் தனது அணியும் என்ன செய்ய இருப்பதாகக் குறித்து கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ரிஷப் பண்ட் கூறும்போது “இங்கிலாந்து தனது அதிரடியான பாஸ்பால் முறையில் விளையாடுவதை தொடர்ந்தால், ஏற்கனவே பழக்கமான ரிஷ்பால் முறையில், நீ விளையாடுவது போல, உன்னை பின்தொடர்ந்து நாங்களும் அவர்களுக்கு எதிராக விளையாடுவோம் என்று ரோஹித் சர்மா என்னிடம் கூறியிருக்கிறார்” என்றுதெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : “2வது டெஸ்ட்.. ரெண்டு பேர்ல இந்த பையனை செலக்ட் பண்ணாதிங்க.. அது ஓவர் ரியாக்சன்” – மஞ்ச்ரேக்கர் கருத்து

இந்த வருடம் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயராக ரிஷப் பண்ட் விளையாடுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவான பயிற்சிகள் தாண்டி போட்டி பயிற்சிகள் என்று தனியாக இருக்கிறது. போட்டி பயிற்சி என்பது போட்டிகளில் விளையாடுவதன் மூலம் வருவது. எனவே வருகின்ற ஐபிஎல் தொடர் ரிஷப் பண்டுக்கு போட்டி பயிற்சியாக அமைந்தால் நல்லது!