ரூல்டு அவுட் கான்வே சிஎஸ்கேவில் இணைந்தார்.. பெருந்தன்மை காட்டிய டீம்.. காரணம் என்ன.?

0
22705
Devon Conway IPL 2024

நடப்பு ஐபிஎல் தொடரில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இடது கை தொடக்க ஆட்டக்காரரும் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரருமான டெவோன் கான்வே காயம் காரணமாக ரூல்டு அவுட் ஆனார். ஆனால் தற்பொழுது அவர் அதே நிலையில் சிஎஸ்கே அணியில் இணைந்து இருக்கிறார். இதற்குப் பின்னணியில் சுவாரசியமான காரணம் ஒன்று இருக்கிறது.

இதுவரையில் டெவோன் கான்வே சிஎஸ்கே அணிக்கு 23 போட்டிகளில் விளையாடி, 9 அரை சதங்களுடன், அதிகபட்சமாக 92* எடுத்து, ஒட்டுமொத்தமாக 923 ரன்கள் சேர்த்திருக்கிறார். சிஎஸ்கே அணிக்காக அதிவேகமாக ஆயிரம் ரன்கள் எடுத்தவர் என்கின்ற சாதனைக்கும் மிக நெருக்கமாகவும் இருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதில் இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது. மொத்தம் 16 போட்டியில் விளையாடிய இவர் 51 ரன் சராசரியில் 140 ஸ்ட்ரைக் ரேட்டில் 671 ரன்கள் சத்தம் இல்லாமல் குவித்து அசத்தினார்.

இந்த நிலையில் காயம் காரணமாக இந்த ஆண்டு இவர் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போக, சில நாட்களுக்கு முன்பு சிஎஸ்கே அணி நிர்வாகம் இவருடைய இடத்திற்கு, இங்கிலாந்தை சேர்ந்த 36 வயதான வலதுகை வேகப்பந்துவீச்சாளர் கிளிசனை 50 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டெவோன் கான்வே மீண்டும் சிஎஸ்கே அணிக்கு வந்து இணைந்து இருக்கிறார். ஆனால் அவர் சிஎஸ்கே அணிக்கு விளையாடக்கூடிய வீரராக வந்து இணையவில்லை. மாறாக சிஎஸ்கே அணியில் இணைந்து பயிற்சி பெறுவதற்காக வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க: என் மனசுல எதுவுமே இல்ல.. இந்த ரெண்டு பேருக்கு மட்டும் நான் ரொம்ப நன்றி சொல்ல விரும்பறேன் – ஜெய்ஸ்வால் பேட்டி

ஐபிஎல் தொடர் முடிந்து ஆரம்பிக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக அவர் தற்பொழுது சிஎஸ்கே அணிக்கு வந்திருக்கிறார். அதே சமயத்தில் அவர் விளையாடுவதற்கான உடல் தகுதியை பெற்றுவிட்டால், முஸ்தஃபிசூர் ரஹமான் சி எஸ் கே அணியை விட்டு வெளியேறியதும், அவருடைய இடத்திற்கு இவரைக் கொண்டு வரவும் வாய்ப்பு இருக்கலாம். ஆனால் அதற்கு விதிமுறைகளில் இடம் இருக்கிறதா? என்பது குறித்து இன்னும் முழுமையாக தெரியவில்லை.