என் மனசுல எதுவுமே இல்ல.. இந்த ரெண்டு பேருக்கு மட்டும் நான் ரொம்ப நன்றி சொல்ல விரும்பறேன் – ஜெய்ஸ்வால் பேட்டி

0
327
Jaiswal

இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தங்களது சொந்த மைதானத்தில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் தங்கள் முதல் இடத்தை மிகவும் வலிமையாக்கி இருக்கிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் வீரர் ஜெய்ஷ்வால் சதம் அடித்தார்.

முதலில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு நிகில் வதேரா 24 பந்தில் 49 ரன்கள், திலக் வர்மா 45 பந்தில் 65 ரன்கள் எடுத்தார்கள். மற்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் யாரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சரியான பங்களிப்பை செய்யவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் சந்தீப் சர்மா ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. பட்லர் 25 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து விளையாடிய ஜெய்ஷ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி 65 பந்துகளில் 109 ரன்கள் குவித்தது.

இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 59 பந்துகளில் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தை நிறைவு செய்தார். இந்த இரண்டு சதங்களுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவே வந்திருக்கிறது. இறுதிவரை களத்தில் நின்ற அவர் ஆட்டம் இழக்காமல் 60 பந்துகளில் 14 ரன்கள் குவித்தார். சஞ்சு சாம்சன் 28 பந்தில் 38 ரன்கள் எடுத்தார்.

சதம் அடித்ததற்கு பிறகு பேசிய ஜெய்ஸ்வால் கூறும் பொழுது “நான் போட்டியை ரசித்து விளையாடினேன். நான் ஆரம்பத்திலிருந்து பந்தை சரியாக பார்க்கவும் சரியான கிரிக்கெட் ஆட்கள் விளையாடவும் உறுதி செய்து கொண்டேன். நான்செய்வதை சரியாக செய்ய முயற்சிக்கிறேன். சில நாட்கள் சரியாக வருகிறது சில நாட்கள் சரியாக வருவதில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : 60 பந்து அசத்தல்.. ஐபிஎல் வரலாற்றில் ஜெய்ஸ்வால் சாதனை சதம்.. மும்பையை வென்றது ராஜஸ்தான் அணி

என் மனதில் வேறு எதுவும் இல்லை. என்னை வழிநடத்திய சீனியர்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மிகக்குறிப்பாக சங்கா சார் மற்றும் சஞ்சு சாம்சன் பாய் இருவருக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். நான் வெளியே சென்று பயிற்சி செய்யும் பொழுது சிறந்ததை கொடுத்து வருகிறேன். இன்றைய சதத்துக்காக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.