தோனி இப்ப ஆடுறதே இதனாலதான்.. என்கிட்ட அப்பவே காரணத்தை சொல்லிட்டாரு- ஆர்பி.சிங் பேட்டி

0
159
Dhoni

ஐபிஎல் தொடரில் கடந்த மூன்று நான்கு வருடங்களாக மகேந்திர சிங் தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் எதுவாக இருக்கும் என்கின்ற பேச்சுதான், ஐபிஎல் தொடரின் மற்ற எந்த விஷயங்களை காட்டியும் மிகப் பரவலாக பேசப்படும் விஷயமாக இருந்து வருகிறது. ஆனால் இது குறித்து இன்னும் யாராலும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர முடியவில்லை. ஏனென்றால் மகேந்திர சிங் தோனி இது குறித்து இதுவரையில் உறுதியான எந்த ஒரு தகவலையும் எந்த ஒரு நேரத்திலும் கூறியது கிடையாது.

தற்போது 42 வயதாகும் மகேந்திர சிங் தோனி நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்று விடுவாரா? என்று மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பித்து இருக்கிறது. ஆனால் அது குறித்து அவரிடம் இருந்து இன்னும் எந்தவிதமான உறுதிப்படுத்தும் வகையிலான சூசகமான பேச்சுகள் கூட வரவில்லை. வழக்கம்போல் சமூக வலைதளங்களில் ரசிகர்களும், நாகரிகமான முறையில் முன்னாள் வீரர்களும் இது குறித்து பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் மார்ச் முதல் வாரத்தில் சென்னை வந்த மகேந்திர சிங் தோனி ஏறக்குறைய 10 மாதங்களுக்குப் பிறகான தனது கிரிக்கெட் பயிற்சியை மெல்ல மெல்ல ஆரம்பித்திருக்கிறார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் ஒவ்வொருவராக ஒன்றிணைந்து, தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் களைகட்ட ஆரம்பித்திருக்கிறது.

கடந்த ஐபிஎல் சீசன் போது கால் முட்டியில் ஏற்பட்டிருந்த காயத்துடன் அவர் தொடர்ந்து விளையாடினார். கான்வே கீப்பிங் செய்ய முடிந்தாலும் கூட, தோனி ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றார். தன்னை பார்ப்பதற்காக நம்பி வரும் ரசிகர்களை தான் ஏமாற்ற விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.

மேலும் அவர் ரசிகர்களுக்காக இப்படி விளையாடிய காரணத்தினால் காயம் இன்னும் பெரிதாவதற்கான வாய்ப்புகளும், அவர் இந்த வருடம் விளையாட முடியாத அளவுக்கு ஆபத்து நிகழக்கூடிய வாய்ப்புகளும் இருந்தன. ஆனாலும் அவர் அடுத்த வருடத்தை பார்க்காமல், நிகழ்காலத்தில் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்று நினைத்தார். தற்பொழுது இந்த வருடமும் தொடர்ந்து விளையாட வந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து மகேந்திர சிங் தோனியின் ஆரம்பம் காலம் முதல் அவருடன் சேர்ந்து இந்திய அணியில் விளையாடிய இடதுகை வேகப் பந்துவீச்சாளர் ஆர்பி.சிங் தோனி தொடர்ந்து கிரிக்கெட் விளையாட எது உந்து சக்தியாக இருந்து வருகிறது என்பது குறித்து சுவாரசியமான விஷயம் ஒன்றை கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : பென் டக்கெட் உங்கள பத்தி சொன்னதுக்கு என்ன சொல்றிங்க? – ஜெய்ஸ்வால் தந்த தரமான பதில்

அவர் கூறும் பொழுது “2006 ஆம் ஆண்டு இந்திய அணியில் நாங்கள் இருந்த பொழுது இந்த சம்பவம் நடந்தது. அப்போது மகேந்திர சிங் தோனி ‘நான் பேருந்தை விட்டு இறங்கும் பொழுது யாரோ இருவர் என்னை பார்ப்பது போல் உணர்ந்தேன். இந்த எண்ணிக்கை எப்பொழுது நான்காக மாறும், இது எப்பொழுது 40 ஆக மாறும்?’ என்று கூறியிருந்தார். அவருடைய விளையாட்டு ஆர்வம் என்பது ரசிகர்களுக்காக விளையாட வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் அவர் பல சாட்களை அடித்து ரசிகர்களுக்காக எப்பொழுதும் மகிழ்ச்சிப்படுத்துவார்” என்று கூறியிருக்கிறார்.