பென் டக்கெட் உங்கள பத்தி சொன்னதுக்கு என்ன சொல்றிங்க? – ஜெய்ஸ்வால் தந்த தரமான பதில்

0
283
Jaiswal

நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்கு மறக்க முடியாத மிகச் சிறப்பான தொடராக அமைந்திருக்கிறது. மேலும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரது வழிநடத்தல் மற்றும் கிரிக்கெட் அறிவுக்கு இந்த தொடர் இன்னொரு உதாரணமாக இருக்கிறது.

அதே சமயத்தில் இந்த தொடர் இந்திய அணியின் சில இளம் வீரர்களின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கையை மேற்கொண்டு நீட்டிக்க செய்வதாக அமைந்திருக்கிறது. இந்த தொடரில் 5 இளம் வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடும் முதல் வாய்ப்பை பெற்றார்கள். இதில் ரஜத் பட்டிதார் தவிர மற்ற நான்கு வீரர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டு, தங்களுக்கான வாய்ப்பை நியாயப்படுத்தி, மேலும் வாய்ப்புகளுக்கு வழி அமைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி, முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸ் இடையே அபாரமாக விளையாடும் 171 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வாலுக்கு, இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்திய மண்ணில் விளையாடும் முதல் சர்வதேச டெஸ்ட் தொடராக அமைந்தது.

இந்தத் தொடரை மிக அதிகமாக பயன்படுத்திக் கொண்ட ஒரு வீரராக ஜெய்ஷ்வால் இருக்கிறார். மொத்தம் ஒன்பது இன்னிங்ஸ்கள் விளையாடி, 80 ரன்கள் சராசரியில், இரண்டு இரட்டை சதங்கள் மற்றும் மூன்று அரை சதங்கள் உடன் 712 ரன்கள் குவித்து, மேலும் சிக்சர்கள் மூலம் தனி சாதனைகள் படைத்து, இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால வீரராக எல்லோரையும் பார்க்க வைத்திருக்கிறார்.

இந்த தொடரில் அவர் அதிரடியாக விளையாடியதை, இங்கிலாந்து அணியின் இடது கை துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் கூறும் பொழுது, இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடுகின்ற காரணத்தினால், தங்களுக்கு எதிராக விளையாடக்கூடிய அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் அதிரடியாக விளையாட வேண்டிய சூழ்நிலை வருகிறது, எனவே அவர்கள் தங்களைப் பார்த்து அப்படி விளையாடுகிறார்கள் என்று ஜெய்ஸ்வாலை கூறியிருந்தார்.

- Advertisement -

தற்போது ஒரு நீண்ட பேட்டியில் இது குறித்து ஜெய்ஸ்வால் இடம் கேட்ட பொழுது “அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. மைதானத்தில் எதைச் சிறப்பாக செய்ய முடியுமோ, அதை நான் சிறப்பாக செய்ய வேண்டும். அதுதான் என்னுடைய வேலை. நான் அதைத்தான் செய்தேன்.

அதே சமயத்தில் ரோகித் சர்மா மாதிரியான ஒரு கேப்டன் டிரெஸ்ஸிங் ரூமில் இருப்பது மிகவும் முக்கியம். அவருக்கு கீழ் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி. தற்போது என்னால் சொல்ல முடியாத அவருடனான பல சிறப்பான தருணங்கள் இருக்கிறது. அது என்னுடனே இருக்கட்டும். இந்தத் தொடரில் வீரர்களை அவர் ஆதரித்த விதம், பேசும் விதம், பேட்டிங் செய்யும் விதம் என எல்லாமே அற்புதமானது. என்ன நடந்தாலும் அவர் வீரர்களுக்கு ஆதரவாக இருப்பார். உங்கள் கேப்டன் இடம் இப்படி ஒன்றைப் பார்ப்பது நம்ப முடியாதது. அவரிடமிருந்து கற்றுக் கொண்டே இருப்பேன்” எனக் கூறியிருக்கிறார்