தோனியின் இடத்தை.. இந்த 26 வயது இந்திய பையனுக்கு கொடுங்கப்பா.. செமையா பண்ணுவான் – நவ்ஜோத் சிங் சித்து உறுதி

0
54
Dhoni

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை விட, நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு இந்திய அணி எப்படி தேர்வு செய்யப்படும்? யாரெல்லாம் அணியில் இடம் பெறுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்புதான் மிக அதிகமாக இருக்கிறது. தற்பொழுது இதுகுறித்து நவ்ஜோத் சிங் சித்து மிக முக்கியமான கருத்து ஒன்றைக் கூறி இருக்கிறார்.

இன்று இந்திய கேப்டன் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் ஆகியோர் டெல்லியில் டி20 உலகக்கோப்பை இந்திய அணியை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெடுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதில் அணி இறுதி செய்யப்பட்டு இன்று அல்லது நாளை வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மிகக் குறிப்பாக இந்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக யார் இருப்பார்கள்? விக்கெட் கீப்பர்களாக யார் இருப்பார்கள்? ரோகித் சர்மா உடன் விராட் கோலி துவக்க வீரராக களம் இறங்குவாரா? என்பது போன்ற கேள்விகள் மிக முக்கியமானவையாக இருக்கின்றன.

ஒருவேளை விராட் கோலி துவக்க இடத்தில் களம் இறங்காவிட்டால், நிச்சயம் கீழ் வரிசையில் ரிங்கு சிங் போன்ற ஒரு வீரர் இடம்பெறுவது கேள்விக்குறியாகும். இல்லையென்றால் சிவம் துபே மிடில் வரிசையில் இடம் பெறுவது சந்தேகத்துக்குரிய ஒன்றாக மாறும். இப்படி விராட் கோலியை மையமாக வைத்தே நிறைய எதிர்பார்ப்புகள் அணிதேர்வில் இருக்கின்றன.

இந்த நிலையில் டி20 உலக கோப்பை இந்திய அணி குறித்து பலவிதமான கருத்துக்கள் இந்திய முன்னாள் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மிக முக்கியமான கோரிக்கை ஒன்றை பிசிசிஐ இடம் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் இப்படியான தப்பு செஞ்சிருக்க கூடாது.. நான் இதை ஏத்துக்க மாட்டேன் – மைக்கேல் கிளார்க் விமர்சனம்

நவ்ஜோத் சிங் சித்து கூறும் பொழுது “தோனியின் இடத்தை நிரப்ப ரிங்கு சிங்குவால் முடியும். அவரால் தோனியை போலவே ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைக்க முடியும். ரிங்கு திறமையானவர், மைதானத்தில் எல்லா பக்கத்திலும் ஷாட் அடிக்கக் கூடியவர். மேலும் தோனியை போலவே அமைதியாகவும் நிதானமாகவும் இருந்து அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாதவர். இந்திய அணிக்கு நீண்ட காலத்திற்கான சிறந்த பினிஷர் ஆக அவர் இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.