ஜெய்ஸ்வால் நீ பேட்ஸ்மேன் மல்யுத்த வீரன் கிடையாது.. ரோகித் ஃபோன் பண்ணி பேசனும் – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

0
387
Jaiswal

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏழு போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளை வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் மிக வலிமையாக இருந்து வருகிறது. அதே சமயத்தில் அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பேட்டிங் ஃபார்ம் கவலை அளிப்பதாக இருக்கிறது. இது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடியிருக்கும் 7 போட்டிகளில் பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் அதிகபட்சம் 39 ரன்கள் எடுத்திருக்கிறார். தொடர்ந்து கிடைக்கும் 15 முதல் 20 ரன்கள் துவக்கத்தை அவர் வீணடித்து வருகிறார். மற்ற பேட்ஸ்மேன்கள் நல்ல முறையில் விளையாடுகின்ற காரணத்தினால் அந்த அணி வெற்றி பெற்று வருகிறது.

- Advertisement -

டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணியை தேர்வு செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், கட்டாயம் துவக்க வீரராக டி20 உலகக்கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால், தற்போது தேர்வு செய்யப்படுவாரா? என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நிலைமைகள் மாறி இருக்கிறது.

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும்பொழுது “ஜெய்ஸ்வால் தற்போது விளையாடி வரும்முறையால் நான் மிகவும் கவலைப்படுகிறேன். அவர் ஒவ்வொரு பந்தையும் அடித்து நொறுக்கவே நினைக்கிறார். நீங்கள் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆனால் மல்யுத்த வீரன் கிடையாது. நீங்கள் ரசல் இல்லை. நீங்கள் வேறு வகையான வீரர்.

எனக்கு இவரை மிகவும் பிடிக்கும் என்பதால் சங்ககாரா இவருடன் பேச வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இல்லையென்றால் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா போன் செய்து எந்த முறையில் விளையாட வேண்டும் என ஜெய்ஸ்வாலிடம் பேச வேண்டும். டி20 உலக கோப்பை இருக்கும்பொழுது இப்படி ஆன பார்மில் இருக்கக் கூடாது என அவர் கூற வேண்டும். ஜெய்ஸ்வால் தனக்கு நேரம் கொடுத்து, தன்னுடைய பேட்டிங் டைமிங்கை பயன்படுத்தி விளையாட வேண்டும். ஆனால் அவர் அடுத்தடுத்து பந்துகளை அடிக்கவே செல்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : பட்லர் சதம் அடிச்சாருதான்.. ஆனா ஆட்டத்தை மாத்தினது இந்த இடத்துல இவருதான் – சஞ்சு சாம்சன் பேட்டி

நேற்றைய போட்டியில் அந்த அணிக்கு சுனில் நரைன் இருந்தார். இந்த அணிக்கு ஜோஸ் பட்லர் இருந்தார். பட்லர் விளையாடும் வேகத்தை மாற்றிய பொழுது அவர் ஒரு தனி நபர் ராணுவமாக மாறினார். தற்போதைய நிலையில் எடுத்துக்கொண்டால் அவரை விட சிறந்த டி20 கிரிக்கெட் துவக்க ஆட்டக்காரர் வேறு யாரும் கிடையாது” எனக் கூறியிருக்கிறார்