அகர்கர் கோலிதான் டி20 உலககோப்பை வாங்கி தர போறாரா? ஆஸ்திரேலியா இப்படி செய்யாது – மேத்யூ ஹைடன் பேட்டி

0
5685
Agarkar

இன்று அல்லது நாளை டி20 உலக கோப்பை இந்திய அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் இந்த இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறுவது உறுதியாகிவிட்டது. தற்பொழுது இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார்.

நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மற்றும் டி20 உலக கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரராக வந்தார். மேலும் தற்போது ஐபிஎல் தொடரில் 500 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்த வீரரின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ஆனாலும் அவரது பேட்டிங் முறை டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்றதாக இருக்குமா? என மேத்யூ ஹைடன் விவாதத்தை கிளப்பி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஆஸ்திரேலிய கிரிக்கெட் கண்ணோட்டத்தில் எங்களுடைய தத்துவம் மிக எளிமையானது. நாங்கள் பெயர்களை பார்த்து ஐகான் வீரர்களையோ தேர்வு செய்வது கிடையாது. எங்களுக்கு யார் வெற்றி பெற்று தருவார்களோ நாங்கள் அவர்களைத்தான் தேர்வு செய்வோம். எங்களிடமும் தற்பொழுது டேவிட் வார்னர் டி20 உலக கோப்பைக்கு செல்ல வேண்டுமா? என்கின்ற விவாதம் சென்று கொண்டிருக்கிறது.

இதேபோல் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் விராட் கோலி இருக்க வேண்டுமா? என்கின்ற விவாதம் இந்தியாவில் முக்கியமானதாக இருக்கும். உங்களுக்காக டி20 உலக கோப்பையை வெல்லப் போவது அவர்தானா? அவருக்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. நல்ல புள்ளி விபரங்கள் இருக்கிறது. என்னுடைய கேள்வி என்னவென்றால் இளம் உத்வேகத்துக்கு எதிராக வரும் அனுபவ வீர விராட் கோலி சரியாக இருப்பாரா? என்பதுதான்

எல்லாவற்றையும் விட இந்தியா அமெரிக்காவில் நான்கு ஆட்டங்கள் விளையாடுகிறது. நமக்கு வெஸ்ட் இண்டிஸ் குறித்து தெரிந்ததை விட அமெரிக்கா குறித்து மிகக் குறைவாகத்தான் தெரியும். மேலும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பவர் பிளே தாண்டி, பந்து மெதுவாக மற்றும் நன்றாக திரும்ப போகிறது. இது பொதுவாகவே விராட் கோலிக்கு பிரச்சனையானது. உங்களுக்கு அந்த இடத்தில் சிவம் துபே போன்ற ஸ்ட்ரைக்கர் தேவை. மேலும் அங்கிருந்து உங்களை ரிங்கு சிங் முன்னோக்கி கொண்டு செல்லப் போகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனியின் இடத்தை.. இந்த 26 வயது இந்திய பையனுக்கு கொடுங்கப்பா.. செமையா பண்ணுவான் – நவ்ஜோத் சிங் சித்து உறுதி

எனவே நீங்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக் கோப்பை முடிந்து டி20 தொடர் விளையாடிய இளம் இந்திய அணியுடன் செல்ல போகிறீர்களா? அந்தத் தொடரில் சதம் அடித்த ருதுராஜ் இப்பொழுது இல்லை. மேலும் ஜெய்ஸ்வால் கூட மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். நிலைமைகள் இப்படி இருக்கும் பொழுது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.