ரிஷப் பண்ட் இப்படியான தப்பு செஞ்சிருக்க கூடாது.. நான் இதை ஏத்துக்க மாட்டேன் – மைக்கேல் கிளார்க் விமர்சனம்

0
322
Rishabh

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் டெல்லி அணி தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு கேப்டன் ரிஷப் பண்ட் முடிவுகள் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்றைய போட்டிக்கு கொடுக்கப்பட்ட ஆடுகளம் வழக்கமான கொல்கத்தா ஆடுகளம் போல் பேட்டிங் செய்ய சாதகமாக இல்லை. ஆரம்பத்தில் பந்து கொஞ்சம் நின்று வந்தது. இரண்டாவது பேட்டிங் செய்யும்பொழுது பந்து திரும்பவும் செய்தது. ஆனாலும் இந்த ஆடுகளத்தில் 200 ரன்கள் சரியாக விளையாடினால் எடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் ரிஷப் பண்ட் ஆடுகளத்தை சரியாக கணிக்காமல், தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். மேலும் டெல்லி அணியில் ஆலோசகராக கொல்கத்தாவின் சவுரவ் கங்குலி இருப்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் அவர்கள் ஆடுகளத்தை கணிக்க தவறினார்கள். மேலும் விளையாடும் பொழுதும் ஆடுகளத்தை புரிந்து விளையாடவில்லை. எனவே டெல்லி அணியின் தோல்விக்கு கேப்டன் மற்றும் பயிற்சி குழுதான் காரணம் என விமர்சனங்கள் கிளம்பி இருக்கிறது.

இதுகுறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறும் பொழுது ” போட்டிக்கு பிறகு கூறப்பட்ட காரணங்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கேட்டால் கிடையாது. நீங்கள் வெற்றி பெற்றால் சூழ்நிலைகளை சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள், தோல்வி அடைந்தால் நீங்கள் சூழ்நிலைகளை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.ரிஷப் பண்ட் அந்த விக்கெட்டை தவறாக புரிந்து கொண்டார். மேலும் அவர்கள் 50 ரன்கள் குறைவாக எடுத்திருந்தனர். நேற்று ரிஷப் பண்ட் தவறு செய்து விட்டார்.

ரன் சேஸில் கொல்கத்தாவுக்கு இன்னும் 3.3 ஓவர்கள் மீதம் இருக்கிறது. மேலும் அவர்கள் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே இருந்தார்கள். அவர்கள் இன்னும் விளையாடுவதாக இருந்தால் குறைந்தது 40 முதல் 50 ரன்கள் எடுத்திருப்பார்கள். எனவே இந்த ஆடுகளத்தில் டெல்லி முதலில் பேட்டிங் செய்ய சென்றால் 200 ரன்கள் எடுத்திருக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க:

கொல்கத்தா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், அதே சமயத்தில் டெல்லி மிகவும் சோகமாக இருக்கும். ஏனென்றால் டெல்லி அணி ஒரு நல்ல வேகத்தில் சென்று கொண்டிருப்பதாக நினைத்தது. அவர்கள் அப்படித்தான் கலந்து சில போட்டிகளாக விளையாடினார்கள். எனவே அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தார்கள். துரதிஷ்டவசமாக நேற்று இரவு அவர்கள் வழியில் செல்லவில்லை” என்று கூறியிருக்கிறார்.