இந்திய வீரர்கள்ல.. இவங்க ரெண்டு பேர் கூட மட்டும் சேர்ந்து தங்கவே மாட்டேன் – ரோகித் சர்மா சுவாரசிய பேட்டி

0
129
Rohit

இந்திய கிரிக்கெட்டின் கேப்டன்களில் ரோகித் சர்மா சற்று வித்தியாசமானவர். எந்த அளவுக்கு திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ, ஆனால் அதே அளவிற்கு களத்தில் சீரியஸாக இல்லாத ஒரு கேப்டன். களத்தில் கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் ஏதாவது செய்து கொண்டே இருப்பார். ஆனால் ரோகித் சர்மாவே இந்திய வீரர்களில் இருவருடன் சேர்ந்து ஒரு அறையில் தாங்க மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் ரோகித் சர்மா கலந்து கொண்டார். அவரிடம் பல விதமான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதில் சில நகைச்சுவையான கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. அதற்கு ரோகித் சர்மா தன்னுடைய பாணியில் அதைவிட நகைச்சுவையாக பதில் அளித்தார்.

- Advertisement -

இதில் இந்திய வீரர்களில் யாருடன் ஒரே அறையை பகிர்ந்து கொள்ள முடியாது என்கின்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு கொஞ்சமும் யோசிக்காத ரோஹித் சர்மா ரிஷப் பண்ட் மற்றும் சிகர் தவான் இருபது பெயரையும் கூறியதோடு, அதற்கான காரணத்தையும் மிக நகைச்சுவையாக கூறினார்.

இதுகுறித்து ரோஹித் சர்மா பதில் கூறும் பொழுது ” தற்பொழுது எல்லா வீரர்களுக்கும் தனி அறை கொடுக்கப்படுகிறது. ஒருவேளை ஒரே அறையில் இரண்டு வீரர்கள் தங்க வேண்டும் என்றால், நான் நிச்சயம் ரிஷப் பண்ட் மற்றும் சிகர் தவான் இருவருடனும் தங்கவேமாட்டேன். ஏனென்றால் அவர்கள் குழப்பமானவர்கள். பயிற்சி முடித்து விட்டு வந்து ஆடையை கழட்டி அப்படியே பெட்டின் மீது வீசிவிடுவார்கள்.

அடுத்து அவர்கள் எப்பொழுதும் மதியம் ஒரு மணி போலத்தான் எழுவார்கள். ஆனால் அறையை சுத்தம் செய்யக்கூடியவர்கள் காலையிலே யேவருவார்கள். ஆனால் இவர்கள் ஏழ மாட்டார்கள். நான்கு ஐந்து நாட்கள் ஆனாலும் அறை அப்படியேதான் இருக்கும். எனவே இவர்களுடன் என்னால் ஒரே அறையில் தங்கவே முடியாது.

- Advertisement -

இதையும் படிங்க : கோலிக்கு சுயநலமா? ஸ்ட்ரைக் ரேட் பிரச்சனை இல்ல.. இதனாலதான் தோத்தாங்க – அம்பதி ராயுடு பேச்சு

அடுத்து உலகக் கோப்பை குறித்து நீங்கள் கேட்டதற்கு, இந்தியாவில் உலகக்கோப்பை நடந்ததால் நாங்கள் வெல்ல வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் கடைசியில் தோல்வி அடைந்து விட்டோம். இது குறித்து மக்கள் கோபமாக இருப்பார்கள் என்று நினைப்போம். ஆனால் அவர்கள் எல்லோரும் நாங்கள் விளையாடிய விதம் குறித்து பாராட்டி நல்ல முறையில் பேசினார்கள்” என்று கூறியிருக்கிறார்.