கோலிக்கு சுயநலமா? ஸ்ட்ரைக் ரேட் பிரச்சனை இல்ல.. இதனாலதான் தோத்தாங்க – அம்பதி ராயுடு பேச்சு

0
227
Virat

நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 67 பந்துகளில் விராட் கோலி சதம் அடித்திருந்தார். இது ஐபிஎல் வரலாற்றில் மெதுவாக அடிக்கப்பட்ட சதமாக பதிவானது. இது குறித்து அம்பதி ராயுடு தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் சதம் அடித்திருந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 125 ரன்கள் எடுத்திருந்தது. அதே சமயத்தில் மேற்கொண்டு ஆறு ஓவர்களில் அந்த அணி 58 ரன்கள் மட்டுமே எடுத்தது. 20 ஓவர்களில் 183 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

- Advertisement -

இதற்குப் பிறகு விளையாட வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் ரன் இல்லாமல் ஆட்டம் இழந்தார். ஆனால் அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் அதிரடியாக விளையாடி 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மொத்தமாக போட்டியை தங்கள் வசம் எடுத்துச் சென்று விட்டார்கள்.

இவர்கள் விளையாடிய விதத்தை வைத்து விராட் கோலியின் பேட்டிங் மிகவும் மெதுவாக இருந்தது என்றும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தோல்விக்கு முக்கிய காரணத்தில் விராட் கோலியின் மெதுவான பேட்டிங்கும் ஒன்று எனவும் பலவாறான விமர்சனங்கள் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இதுகுறித்து பேசி உள்ள அம்பதி ராயுடு கூறும் பொழுது “என்னை பொறுத்தவரை விராட் கோலி நேற்று அடித்த சதம் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அடித்த சிறந்த சதங்களில் ஒன்றாகும். அவர் சுயநலம் இன்றி அணிக்காக நேற்று விளையாடினார். நேற்று பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் அடிக்க முயற்சி செய்த பொழுது அது கை கூடாமல் போய் இருக்கலாம். ஆனாலும் அவர் அணிக்கு தேவையானதை செய்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை இந்திய அணியில் விராட் கோலிக்கு வாய்ப்பு கிடைக்குமா.? – ஆர்சிபி கோச் வித்தியாசமான பதில்

பிரச்சனை விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் கிடையாது. பிரச்சனை மற்ற பேட்ஸ்மேன் யாரும் பங்களிப்பு செய்யவில்லை என்பதுதான். அவர்கள் வெறுமனே இருந்தார்கள். டக் அவுட்டில் தினேஷ் கார்த்திக் என்ன செய்து கொண்டு இருந்தார்? நேற்று அவர் மேக்ஸ்வெல் மற்றும் கிரீன் விளையாட வந்ததற்கு முன்பாகவே வந்திருக்க வேண்டும். ஆர்சிபி அணியின் வெற்றியின் பங்களிப்பு செய்த மகிபால் லோம்ரர் நேற்று பிளேயிங் லெவனிலேயே இல்லை” என்று கூறியிருக்கிறார்.