ரோகித் சர்மா 2 சாதனைகள்.. தோனிக்கு அடுத்த இடம்.. மும்பை இந்தியன்ஸ்க்கு ஸ்பெஷல் ரெக்கார்ட்

0
122
Rohit

இன்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு அணிகளுமே தோல்வியில் இருந்து வருவதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது.

இந்தப் போட்டிக்கான தாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். பஞ்சாப் அணியில் ஒரு மாற்றமாக ஜானி பேர்ஸ்டோ இடத்தில் ரயிலி ரூசோ இந்த ஐபிஎல் தொடரில் விளையாடும் முதல் வாய்ப்பை பெற்றார். மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை அணிக்கு இசான் கிஷான் 8 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ரபாடா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து உள்ளே வந்த சூரியகுமார் யாதவ் ரோகித் சர்மா உடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி அரைசதம் கடந்து பார்ட்னர்ஷிப் அமைத்தது.

ஒருமுனையில் சூரியகுமார் யாதவ் அதிரடி காட்ட பொறுமையாக விளையாடிய ரோஹித் சர்மா 25 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 57 பந்துகளில் 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதற்கு அடுத்து திலக் வர்மா விளையாட வர, சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 78 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி அதிரடியாக 28 பந்துகளில் 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதற்கு அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா 10(6), டிம் டேவிட் 14(7), ரோமரியோ செப்பர்டு 1(2), நபி 0(1) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இறுதி வரை களத்தில் நின்ற திலக் வர்மா 18 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு தரப்பில் கேப்டன் சாம் கரன் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் ஆர்சிபி-க்கு விளையாட மட்டும் ஆசைப்படல.. என் ப்ளானே வேற – கேஎல்.ராகுல் மனம் திறந்த பேட்டி

இந்த போட்டியை ரோஹித் சர்மாவுக்கு 250 ஆவது ஐபிஎல் போட்டியாக அமைந்தது. தோனிக்கு அடுத்து 250 ஐபிஎல் போட்டி விளையாடும் இரண்டாவது வீரராக ரோஹித் சர்மா சாதனை படைத்தார். மேலும் இன்றைய போட்டியில் மூன்று சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக, மும்பை இந்தியன் அணிக்காக 224 சிக்ஸர்கள் அடித்து, அந்த அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன்பு முதல் இடத்தில் கீரன் பொல்லார்டு 223 சிக்ஸர்கள் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.