நான் ஆர்சிபி-க்கு விளையாட மட்டும் ஆசைப்படல.. என் ப்ளானே வேற – கேஎல்.ராகுல் மனம் திறந்த பேட்டி

0
14
Rahul

ஐபிஎல் வரலாற்றில் சிறந்த வீரர்களை தங்கள் அணியில் இருந்து இழந்த அணியில் முதன்மையான இடம் ஆர்சிபி அணிக்குதான் இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து தக்க வைக்காமல் வெளியில் விட்ட பல வீரர்கள் பல அணிகளில் ஜொலித்திருக்கிறார்கள். இதில் மிகவும் முக்கியமானவர் கேஎல்.ராகுல். தற்போது அவர் ஆர்சிபி அணி தன்னை தக்க வைக்காமல் விட்டது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட கேஎல்.ராகுலை ஆர்சிபி என் 2013ஆம் ஆண்டு வாங்கியது. இதற்கு அடுத்து மீண்டும் நடைபெற்ற மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்க அவர் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு அந்த அணிக்காக விளையாடினார். இந்த நிலையில் மீண்டும் 2016 ஆம் ஆண்டு அவரை ஆர்சிபி அணி வாங்கியது. அவர் காயம் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்கு விளையாட முடியவில்லை.

- Advertisement -

இந்த நிலையில்தான் ஆர்சிபி அணி நிர்வாகம் 2018 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பாக கேஎல்.ராகுலை தக்க வைக்காமல் கழட்டி விட்டது. வளர்ந்து வரும் இளம் வீரரான, குறிப்பாக இந்திய வீரரான அவரை கழட்டி விட்டதற்கு அந்த அணி தற்பொழுது வரை வருத்தப்படக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் உடனான உரையாடலில் கேஎல்.ராகுல் கூறும் பொழுது “நான் கர்நாடக வீரர் பெங்களூரைச் சேர்ந்தவன் என்பதை ஒருபோதும் யாராலும் மாற்ற முடியாது. கர்நாடக கிரிக்கெட் சங்கம் என்னுடைய வீடு. அதற்கு முன்பாக பெங்களூர் சின்னசாமி மைதானம் என்னுடைய முதல் வீடு. ஒவ்வொரு இளம் வீரரும் ஐபிஎல் ஏலத்தில் தங்கள் மாநில அணிக்காக விளையாடவே விரும்புகிறார்கள். எனவே நான் ஆர்சிபி அணிக்காக விளையாடியிருந்தால் அது மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

பொதுவாக ஐபிஎல் தொடர் என்பது ஒரு நகரும் செட் போல. ஜார்கண்டை சேர்ந்த தோனி சென்னை அணிக்காகவும், டெல்லியைச் சேர்ந்த விராட் கோலி பெங்களூர் அணிக்காகவும் எனக்கு முன்பாகவே விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் ஒரே அணிக்காக விளையாட விரும்பலாம். ஆனால் ஐபிஎல் தொடரில் அது முடியாது. நான் அணிகளுக்கு சென்று வருவது கடினமாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : கோலிக்கு எதிராக இது இல்லை.. டி20 உலககோப்பை இந்திய ஓபனர் இவர்தான் – இயான் மோர்கன் பேச்சு

எனக்கு ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் என்கின்ற ஆசை மட்டும் கிடையாது, நான் ஆர்சிபி அணியில் ஆரம்பித்தேன், நான் ஆர்சிபி விளையாடி முடிக்கவும் ஆசைப்பட்டேன். இதுதான் என்னுடைய மனதில் இருந்து. ஆனால் அடுத்த ஐபிஎல் ஏலத்தில் நான் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டேன். இதுதான் ஐபிஎல் தொடரின் அழகு” என்று கூறியிருக்கிறார்.