தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகல்.. ரோகித் சர்மா வெளியிட்ட பதிவு.. ரசிகர்கள் நெகழ்ச்சி

0
1381
Rohit

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 17வது ஐபிஎல் சீசன் மிகவும் கோலாகலமாக கொண்டாட்டத்துடன் ஆரம்பிக்க இருக்கிறது. தற்பொழுது நடப்பு சாம்பியனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்து வருகிறது. கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது.

கடந்த ஆண்டு முதல், வின்னர் மற்றும் ரன்னர் அணிகளை கொண்டு முதல் போட்டி நடத்தப்படுவதில்லை. கடந்த முறை வெற்றி பெற்ற குஜராத் மற்றும் ப்ளே ஆப் செல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என இரண்டு அணிகளும் முதல் போட்டியில் விளையாடின. இந்த முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ப்ளே ஆப் சுற்றுக்கு கடந்த முறை தகுதி பெறாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

- Advertisement -

மேலும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகின்ற காரணத்தினால், சென்னை மற்றும் பெங்களூர் அணியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதன் காரணமாக சமூக வலைதளத்தில் இரு அணி ரசிகர்களுக்கும் இடையே நகைச்சுவையாக பல மீம்ஸ்கள் பறந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகிக் கொண்டார். அவருடைய இடத்திற்கு 27 வயதான துவக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தால் புதிய கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

லெஜெண்டுகளின் ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்துள்ள தோனி மற்றும் விராட் கோலி, தற்பொழுதும் கேப்டனாக இருக்கின்ற ரோகித் சர்மா மூவருமே ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களான மூன்று பேரும் தற்பொழுது அணியில் வீரர்களாகவே தொடர்கிறார்கள்.

- Advertisement -

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக மகேந்திர சிங் தோனி ஐந்து கோப்பைகளை வென்று இருக்க, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா ஐந்து கோப்பைகளை வென்று இருக்கிறார். இருவருமே ஆறாவது முதலில் வென்ற கேப்டன் என்கின்ற போட்டியில் தற்போது இல்லை.

இதையும் படிங்க : சிஎஸ்கே புது கேப்டன் ருதுராஜ்.. தோனி முழு ஐபிஎல் சீசனும் விளையாடுவாரா? – பிளமிங் நேரடியான பதில்

மகேந்திர சிங் தோனி சிஎஸ்கே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரோஹித் சர்மா, அதில் ஐபிஎல் போட்டியின் போது டாஸ் நிகழ்வில் ரோஹித் சர்மா மற்றும் மகேந்திர சிங் தோனி இருவரும் கைகுலுக்குவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, அதற்கு கீழே கை குலுக்குவது போன்ற பொம்மையை பதிவு செய்திருக்கிறார். ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான ஒரு கேப்டன் மற்றொரு வெற்றிகரமான கேப்டனுக்கு மரியாதை செய்தது ரசிகர்களிடையே மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.