சிஎஸ்கே புது கேப்டன் ருதுராஜ்.. தோனி முழு ஐபிஎல் சீசனும் விளையாடுவாரா? – பிளமிங் நேரடியான பதில்

0
376
Dhoni

ஐபிஎல் தொடரின் மிக வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி, 17ஆவது ஐபிஎல் சீசன் நாளை துவங்க இருக்கும் நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு, புதிய கேப்டனாக 27 வயது சிஎஸ்கே அணியின் துவக்க ஆட்டக்காரர் ருதுராஜை கொண்டு வந்திருக்கிறார்.

சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மகேந்திர சிங் தோனி இப்படியான நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார். தன்னுடைய கடைசி சீசனில் கேப்டனாக தன்னை பார்க்க ரசிகர்கள் விரும்புவார்கள் என்று தெரிந்தாலும் கூட, அணியின் நன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது என்பதோடு, போட்டி சிஎஸ்கே அணியின் சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. எனவே நாளை கேப்டனாக தோனி களம் வருவார் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.

அதேவேளையில் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யார் கேப்டனாக வரலாம் என்கின்ற கேள்விக்கு, பல சிஎஸ்கே ரசிகர்களின் பதில் ருதுராஜ் என்பதாகத்தான் இருந்தது. தோனியின் முடிவால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருந்தாலும் கூட, இந்த முடிவு சரியானது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள்.

- Advertisement -

தோனி முழு ஐபிஎல் சீசன் விளையாடுவாரா?

அதே சமயத்தில் ருதுராஜ் கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கின்ற காரணத்தினால், தோனி இந்த சீசன் முழுவதும் விளையாடுவாரா? அவரது உடல் தகுதி நன்றாக இருக்கிறதா? ஒருவேளை அவர் சீசன் முழுவதும் விளையாட மாட்டார் என்பதால்தான், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மீறி இப்படி ஒரு முடிவை எடுத்தாரா? என்பது குறித்து சந்தேகம் வெளியில் நிலவுகிறது.

ஒருவேளை மகேந்திர சிங் தோனி இந்த ஐபிஎல் தொடரில் எல்லா போட்டிகளிலும் விளையாட மாட்டார், குறைந்த போட்டிகளில் மட்டும் தான் விளையாடுவார் என்றால், அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு மிகப் பெரிய சோகமான ஒன்றாக அமையும். சிஎஸ்கே கோப்பையை வென்றாலும் கூட அவர்களுக்கு திருப்தி இருக்காது.

இதையும் படிங்க : ராஜஸ்தான் ராயல்ஸ் முக்கிய வீரர் ஐபிஎல்-ல் இருந்து விலகல்.. சங்கக்கரா திட்டம் வீண்.. பெரிய பின்னடைவு

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் கூறும் பொழுது “தோனி இந்த ஐபிஎல் சீசனின் எல்லா போட்டிகளிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன் அவரது உடல் தகுதி முன்பை விட மிகச் சிறப்பாக இருக்கிறது. கடந்த ஆண்டு ஒப்பிட்டு பார்க்கும்பொழுது அவர் தற்போது விளையாடும் விதம் அருமையாக இருக்கிறது. மேலும் அவரது முழங்கால் மற்றும் உடல் மிக வலிமையாக தெரிகிறது. அணிக்கு பங்காற்றுவது மற்றும் சிறப்பாக செயல்படுவதில் அவருக்கு உள்ள விருப்பம் எப்பொழுதும் போல் அதிகமாகவே இருக்கிறது. இது எங்களுக்கு மிகவும் நல்ல விஷயம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -