நான் உண்மையான ஆல் ரவுண்டர்.. பெரிய வாய்ப்புக்கு காத்திருக்கேன்.. என் ரோல் இதுதான் – நிதிஷ் ரெட்டி பேட்டி

0
287
Nitish

ஆந்திராவைச் சேர்ந்த 20 வயதான மிதவேக பந்துவீச்சு ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி, ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நேற்று ராஜஸ்தானுக்கு எதிராக பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்ட அவர், தான் பெரிய வாய்ப்புகளுக்காக காத்திருப்பதாக கூறி இருக்கிறார்.

நேற்று ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் தடுமாறியது. இரண்டு விக்கெட்டுகள் விழுந்த பிறகு உள்ளே வந்த நிதிஷ் ரெட்டி ஹெட் தடுமாறிய ஆடுகளத்தில் சரளமாக விளையாடிய ரன்கள் சேர்த்தார்.

- Advertisement -

மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சாகலுக்கு எதிராக அதிரடியாக விளையாடி ரன் அழுத்தத்தை எடுத்தார். நேற்று மூன்று பவுண்டரிகள் அடித்த அவர், மொத்தமாக 8 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். 42 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். இவருடைய பேட்டிங் செயல்பாடு அடுத்து ஹைதராபாத் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய ரன்களை ஸ்கோர் போர்டில் கொடுத்தது. கடைசிப் பந்து வரை சென்ற போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் வென்றது.

நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் ரெட்டி பேசும் பொழுது “முதல் பந்தில் இருந்தே என்னை நான் ஆதரிக்கிறேன். நான் நேற்று 11 பந்தில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தேன். பிறகு எனக்கு சாகல் ஓவர் மிக நன்றாக சென்றது. அங்கிருந்து நான் எனது ஆட்டத்தை எடுத்துச் சென்றேன். அடுத்து வந்த கிளாசன் சிறப்பாக விளையாடினார். நான் பந்துவீச்சாளர்களை பார்க்காமல் பந்தை பார்த்து விளையாடுகிறேன்.

நான் என்னுடைய விளையாட்டை விளையாட, அது கிளாசன் வந்து விளையாடுவதற்கு நல்ல சூழ்நிலையை உருவாக்கியது. ஹெட்டுடன் உடன் விளையாடுவது ரைட் லெப்ட் காம்பினேஷன் தருகிறது. அவர் மிகவும் கடினமான வீரர். அவர் களத்தில் இருந்ததால் எனக்கு சில லூஸ் பந்துகள் கிடைத்தன.இதேபோல் கிளாசன் நல்ல ஸ்ட்ரைக்கர். நான் அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்க முயற்சி செய்தேன்.

- Advertisement -

இதையும் படிங்க : நிதிஷ் ரெட்டி என்னோட ஃபேவரைட்டா மாறிட்டு வரார்.. நேத்து அவர் செஞ்ச இந்த காரியம் அபூர்வம் – ஷேன் வாட்சன் பாராட்டு

மேலும் நான் ஒரு உண்மையான ஆல் ரவுண்டர். என்னால் களத்தில் பேட்டிங் பவுலிங் பீல்டிங் என எல்லாவற்றிலும் சிறப்பாக செயல்பட முடியும். நான் பெரிய வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன். தற்போது ராஜஸ்தானை வீழ்த்தி இரண்டு புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் மேலே சென்று இருப்பது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.