இது அவுட் இல்லனாலும்.. ராஜஸ்தான் ரூல்ஸ் படி தோல்விதான்.. இது ஒரு போலியான விதி – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

0
7611
Powell

நேற்று ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வீரர் ரோமன் பவல் கடைசிப் பந்தில் ஆட்டம் இழக்க, ராஜஸ்தான் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்தப் பந்தில் டிஆர்எஸ் விதிப்படி அவர் அவுட் இல்லை என்றாலும் கூட ராஜஸ்தான் தோல்வி அடையும் என்பதுதான் வினோதம். இந்த விதி குறித்து ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்திருக்கிறார்.

உலக விளையாட்டுகளில் கிரிக்கெட் காலத்திற்கு தகுந்தார் போல் வடிவத்தை மாற்றிக் கொள்வதோடு மட்டும் இல்லாமல், வடிவத்திற்கு தகுந்தார் போல் விதிகளையும் பல மாதிரி மாற்றிக் கொண்டே வரும். ஒரு காலகட்டத்தில் இருந்த விதி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருக்காது.

- Advertisement -

உதாரணமாக முதன் முதலில் 90களில் பீல்டிங் விதிமுறைகள் கொண்டுவரப்பட்டது. தற்போது அதே பீல்டிங் விதிமுறையில் ஒரு நாள் கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. கிரிக்கெட்டைப் பொருத்தவரையில் நிறைய மாற்றங்களை சேர்க்கலாம், நீக்கலாம்.ஆனால் சில தேவையில்லாத விஷயங்களும் கிரிக்கெட்டில் விதிகளாக இருப்பதுதான் முரணான விஷயம்.

இந்த வகையில் நேற்று ராஜஸ்தான் அணியில் வெற்றிக்கு ஒரு பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டபோது, புவனேஸ்வர் குமார் வீசிய குறிப்பிட்ட அந்தப் பந்தில் ரோமன் பவல் ஆட்டம் எல்பிடபிள்யூ செய்யப்பட்டார். கள நடுவர் அதற்கு அவுட் கொடுத்தார். ரோமன் பவல் இதற்கு மேல் முறையீடு செய்து மூன்றாவது நடுவரிடம் செல்ல, டிஆர்எஸ் பார்க்கப்பட்டது.

இங்குதான் வினோதமான ஒரு விதி இருக்கிறது. என்னவென்றால் கள நடுவர் எல்பிடபிள்யு முறையில் அவுட் கொடுத்தால் பந்து உடனே டெட் ஆகிவிடும். மூன்றாவது நடுவரிடம் சென்று அவுட் இல்லை என்று தெரிய வந்தாலும், அந்தப் பந்துக்கு ஓடி ரன் எடுத்தாலோ, அல்லது பந்து பவுண்டரிக்கு சென்றாலோ, ஒருவேளை பந்து பேட்டில் பட்டு சென்று இருந்தாலும் கூட, அதற்கு ரன்கள் வழங்கப்படாது. இந்த இடத்தில் ரோமன் பவலுக்கு நடுவர் அவுட் கொடுத்த பொழுதே, ராஜஸ்தான் அணி தோற்றுவிட்டது. அவர்கள் அப்பொழுது ஓடி எடுத்த ரன் கொடுக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் கஷ்டமான இந்த வேலையை செய்யறார்.. அதனாலதான் ரிங்கு மாதிரி பசங்க மதிக்கிறாங்க – டாம் மூடி பாராட்டு

இந்த அர்த்தமில்லாத விதி குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “பந்து ஸ்டெம்ப்பை தாக்கவில்லை என்றால், ரோமன் பவர் அவுட் இல்லை என்றால் என்ன செய்வது? இது டிஆர்எஸ் விதியில் யோசிக்கப்படாத ஒன்று. ஒருமுறை அவுட் கொடுத்து விட்டால் அந்த பந்து டெட் ஆகி விடுகிறது. அதாவது அந்தப் பந்து ஒரு லெக் பை மூலமாக பவுண்டரி சென்றாலும் கூட, அப்பொழுது ரோமன் பவுல் அவுட் இல்லை என்றாலும் கூட, ராஜஸ்தான் தோல்வியடையும், ஹைதராபாத் அணிதான் வெற்றி அடையும்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.