டி20 உ.கோ இந்திய அணியில் தோனி இடம்பெறுகிறாரா? – கேப்டன் ரோஹித் சர்மா சுவாரசியமான பதில்

0
435
Rohit

தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வரும் 17 வது ஐபிஎல் சீசன் மே மாதம் இறுதியில் முடிவடைந்ததும், ஜூன் மாதம் ஆரம்பத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி தேர்வுக் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் ஆலோசனை செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இதில் தோனி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா சுவாரசியமான கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கு அணியை அறிவிப்பதற்கான கடைசி தேதியாக மே ஒன்றாம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஏப்ரல் மாதக் கடைசியில் டி20 உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் விக்கெட் கீப்பர்கள் யார் என்பதுதான் பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. இஷான் கிஷான் வெளியேற்றப்பட்டு இருப்பதால், ஜித்தேஷ் சர்மா பரிசோதனையிலேயே தொடர்ந்து இருப்பதாலும், இன்னும் இரண்டு விக்கெட் கீப்பர்கள் யார் என்பது முடிவு செய்யப்படாத ஆக இருந்து வருகிறது.

தற்பொழுது கில்கிறிஸ்ட் உடன் ஒரு பாட்காஸ்டில் பேசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா “நான் உண்மையில் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தை பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவர் கடைசி இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்த விதம் மிகவும் அபாரமாக இருந்தது. இதேபோல் தோனி எங்களுக்கு எதிராக நான்கு பன்றி 20 ரன்கள் எடுத்ததும் மிகவும் சிறப்பானது. அந்த போட்டியில் அவருடைய பேட்டிங்தான் வித்தியாசத்தை ஏற்படுத்தியது.

தோனி வெஸ்ட் இண்டீஸ் வருவார் என்று நம்புவது மிகவும் கடினமான ஒன்று. அவர் கொஞ்சம் சோர்வாகவும் உடல் நலம் இல்லாமல் இருப்பது போல் தெரிகிறது. எனவே அவர் ஓய்வுக்காக அமெரிக்கா வரலாம். அவர் அங்கு வந்து கோல்ப் வேண்டுமானால் விளையாடலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : ரெண்டாவது பேச்சுக்கே இடம் கிடையாது.. தொட்டா அடிதான்.. அவர் கூட இருந்தா போதும் – மெக்கர்க் பேட்டி

அதே சமயத்தில் டி20 உலக கோப்பை இந்திய அணியில் விளையாடும் படி தினேஷ் கார்த்திக்கை சமாதானப்படுத்துவது வேண்டுமானால் எளிதான வேலையாக இருக்கும். அவர் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு இது குறித்து யோசித்து இருக்கக்கூடும். அவர் விஷயத்தில் என்னுடைய பதில் இதுதான்” என்று கூறியிருக்கிறார்.