இந்தியாவுக்கு ஆட போற பிளேயருக்கு வாய்ப்பு தராம விட்டுட்டேன்.. தோல்வி காரணம் இதுதான் – ஹர்திக் பாண்டியா

0
5278
Hardik

இன்று லக்னோ மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ அணிக்கு எதிராக நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோல்விக்கான காரணங்கள் குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நட்சத்திர பேட்ஸ்மேன் யாருமே ரன்கள் சேர்க்கவில்லை. நெகேல் வதேரா மட்டும் தாக்குப் பிடித்து விளையாடி 41 பந்தில் 46 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் மும்பை அணியால் ஏழு விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ மணிக்கு மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா வீரர் ஸ்டோனிஸ் சிறப்பாக விளையாடி 45 பந்துகளில் 62 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். போட்டி கடைசி ஓவருக்கு செல்ல, பூரன் 14 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து லக்னோ அணியை வெற்றி பெற வைத்தார்.

மும்பை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 போட்டிகளில் விளையாடி அதில் 7 போட்டிகளை தோற்று மூன்று போட்டிகளை மட்டுமே வென்று இருக்கிறது. இதன் காரணத்தால் ஏறக்குறைய அந்த அணியின் ப்ளே ஆப் சுற்றி வாய்ப்பு முடிந்துவிட்டது என்று கூறலாம். மும்பை அணியின் கேப்டன் மாற்றம் அந்த அணியை மிகப்பெரிய அளவில் பாதித்திருப்பது உண்மை.

தோல்விக்கு பின் பேசிய மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது “பவர் பிளேவில் நாங்கள் ஆரம்ப விக்கெட்டுகளை இழந்தது எங்களை பாதித்தது. இதிலிருந்து மீள்வது கடினம். நாங்கள் சரியான இடத்தில் சரியாக செயல்படவில்லை. விக்கெட் நன்றாகத்தான் இருந்தது. பந்தை பார்த்து அடிக்க நாங்க மிஸ் பண்ணிட்டோம். களத்தில் சில நேரம் தாழ்வாகவும் எழுச்சியாகவும் இருக்கும். போராடுவது மட்டுமே எனது நம்பிக்கையாக இருக்கும். இப்பொழுது கடினமாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : லக்னோ ஈஸியான வெற்றி.. மும்பை அணி கதையை முடித்தது.. சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் கீழே இறங்கியது

இந்த போட்டியில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உண்டு. வதேரா ராஜஸ்தானுக்கு எதிராகவும் இன்றும் பேட்டிங் செய்த விதம் மிகவும் அருமையாக இருக்கிறது. ஆரம்பத்தில் டீம் காம்பினேஷனுக்காக அவருக்கு அணியில் இடம் கொடுக்க முடியவில்லை. கடந்த ஆண்டும் அவர் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். அவரது திறமையை பார்த்தால், மும்பைக்காகவும் இந்திய அணிக்காகவும் நீண்ட காலம் விளையாடுபவர் போல தெரிகிறது” என்று கூறியிருக்கிறார்.