ரெண்டாவது பேச்சுக்கே இடம் கிடையாது.. தொட்டா அடிதான்.. அவர் கூட இருந்தா போதும் – மெக்கர்க் பேட்டி

0
29
Fraser

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முக்கிய வீரர்களின் காயத்தால் ஆரம்பத்தில் பெரிய பின்னடைவை சந்தித்தது. தற்போது ஏழு போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளை வென்று இருக்கிறது. மேலும் டேவிட் வார்னர், மிட்சல் மார்ஸ், அன்றிச் நோக்கியா போன்ற நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் டெல்லி வெற்றி பெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவின் இளம் துவக்க ஆட்டக்காரர் ஜாக் பிரேசர் மெக்கர்க் அதிரடியில் அனைவர் கவனத்தையும் கவர்ந்து வருகிறார்.

டெல்லி அணி லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் ஜாக் பிரேசர் மெக்கர்க் அறிமுகமானார். அறிமுகமான அந்தப் போட்டியிலேயே அரை சதம் அடித்தார். டேவிட் பார்ட்னருக்கு அடுத்து ஆஸ்திரேலியாவின் வலிமையான துவக்க ஆட்டக்காரராக வருவார் என்று எதிர்பார்க்கும் நிலையில், நேற்று குஜராத் அணிக்கு எதிராக டேவிட் வார்னர் இல்லாத நிலையில் துவக்க ஆட்டக்காரராக வந்தார்.

- Advertisement -

டெல்லி அணி 90 ரன்கள் என்கின்ற குறைந்த இலக்கை நோக்கி விளையாடிய பொழுது, சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து, தலா இரண்டு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகள் உடன், அதிரடியாக பத்து பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். நேற்றைய போட்டியில் ரன் ரேட் பெறுவதற்காக விக்கெட் பற்றி கவலை இல்லாமல் விளையாடினார்கள்.

இவரின் வருகை மற்றும் டெல்லி மொத்தமாக இந்திய பந்துவீச்சாளர்களை வைத்து மட்டும் விளையாடுவது போன்ற விஷயங்கள் அந்த அணிக்கு பாசிட்டிவான முடிவுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பாதி ஐபிஎல் தொடர் நடைபெற்றிருக்கும் நிலையில், மறுபாதி ஐபிஎல் தொடரில் டெல்லி அணி இன்னும் சிறப்பாக விளையாடும் என கேப்டன் ரிஷப் பண்ட் கூறியிருக்கிறார்.

நேற்றைய போட்டி குறித்து ஜாக் பிரேசர் மெக்கர்க் கூறும் பொழுது “நான் நல்ல ஒரு துவக்கத்தை பெறுவதன் மூலமாக அணிக்கு இரண்டு ரன் ரேட் கொண்டு வர விரும்புகிறேன். நீங்கள் இப்படிப்பட்ட ஒரு கிரிக்கெட் வடிவத்தில் விளையாடும் பொழுது தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். கிரிக்கெட்எப்பொழுதுமே ஒரு வேடிக்கையான விளையாட்டு. நாங்கள் வேலைகளைச் சிறப்பாக செய்தோம். நேற்று பனி வந்ததும் நாங்கள் பேட்டிங் செய்ய எளிதானது.

- Advertisement -

இதையும் படிங்க : புள்ளி பட்டியல்: ஒரு வெற்றி 3 இடம் தாவிய டெல்லி.. மாறிய ஐபிஎல் 2024 பிளே ஆஃப் வாய்ப்புகள்

ரிக்கி பாண்டிங் உடன் இணைந்து விளையாடுவது உண்மைதானா? என்று கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவருடைய கடைசி டெஸ்ட் போட்டியின் போது நாதன் லயன் அவரைப் பற்றி பேசியது எனக்கு நினைவு இருக்கிறது. நாங்கள் ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கி சில போட்டிகளை தோற்றோம். தற்போது நாங்கள் நம்பிக்கை பெற்று இருக்கிறோம். இப்பொழுதுஎங்கள் சொந்த ஆட்டத்தை நம்பி விளையாடுகிறோம். நான் ஆக்ரோஷமாக தான் விளையாடுவேன் இதில் இரண்டாவது பேச்சுக்கு இடம் கிடையாது” எனக் கூறியிருக்கிறார்.