லக்னோ ஈஸியான வெற்றி.. மும்பை அணி கதையை முடித்தது.. சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் கீழே இறங்கியது

0
2486
LSG

இன்று ஐபிஎல் தொடரின் 48வது போட்டியில் லக்னோ மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற லக்னோ முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா 4(5), சூரியகுமார் யாதவ் 10(6), திலக் வர்மா 7(11), கேப்டன் ஹர்திக் பாண்டியா 0(1) என அடுத்தடுத்து வெளியேறி, மும்பை அணிக்கு பெரிய நெருக்கடியை உண்டாக்கினார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் மற்றும் நெகேல் வதேரா ஜோடி 53 பந்துகளுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இசான் கிஷான் 36 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். நெகேல் வதேரா 41 பந்தில் 46 ரன்கள் எடுத்தார். கடைசிக் கட்டத்தில் டிம் டேவிட் ஆட்டம் இழக்காமல் 18 பந்தில் 35 எடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில், ஏழு விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ தரப்பில் மோசின் கான் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணிக்கு அர்சன் குல்கர்னி சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கேஎல்.ராகுல் மற்றும் ஸ்டோய்னிஸ் ஜோடி 40 பந்தில் 58 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் 22 பந்தில் 28 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த தீபக் ஹூடா 18 பந்தில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். சிறப்பாக விளையாடிய ஸ்டோய்னிஸ் 45 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க: ரோகித் சர்மா அப்பவே இதை சொன்னார்.. இப்ப டி20 உ.கோ இந்திய அணியில் இடம் கிடைச்சிருக்கு – ஷிவம் துபே பேட்டி

- Advertisement -

பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் இந்த கடினமான ஆடுகளத்தில் போட்டி கடைசி ஓவருக்கு செல்ல, நிக்கோலஸ் போரன் 14 பந்தில் 14 ரன்கள் எடுத்து, லக்னோ அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். பத்து போட்டியில் ஆறு வெற்றி பெற்று 12 புள்ளிகள் உடன், லக்னோ புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்தது. சிஎஸ்கே தற்போது நான்காவது இடத்திற்கு சரிந்து இருக்கிறது. பத்துப் போட்டியில் 7 போட்டிகளை தோற்ற மும்பை அணியின் பிளே ஆப் வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது.