“தெளிவா சொல்றேன்.. கிரிக்கெட்டில் இருந்து என்னுடைய ஓய்வு அப்போதுதான் நடக்கும்” ரோகித் சர்மா பதில்

0
676
Rohit

2021 ஆம் ஆண்டு விராட் கோலி தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஒட்டுமொத்தமாக மூன்று வடிவ இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகிக் கொண்டார். இந்த நேரத்தில் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி பதவி காலமும் முடிவுக்கு வந்திருந்தது.

இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களுக்கும் புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவையும், புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டையும் இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்தது.

- Advertisement -

இவர்கள் இருவரும் சேர்ந்து இந்திய அணியின் கலாச்சாரத்தில் மற்றும் அணி உருவாக்கத்தில் நிறைய மாற்றங்களை உருவாக்கி, நிறைய புதிய வீரர்களை உள்ளே கொண்டு வந்து, அவர்களை முழுக்க சுதந்திரமாக விளையாட வைப்பதில் கவனம் செலுத்தி வெற்றியடைந்திருக்கிறார்கள்.

இவர்களுடைய புதிய அணுகுமுறையின் பலனாக இந்திய அணி கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடி துரதிஷ்டவசமாக இறுதிப்போட்டியில் தோற்றது. தற்பொழுது இளம் வீரர்களைக் கொண்டும் இங்கிலாந்து போன்ற பெரிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை நான்குக்கு ஒன்று என அபாரமாக கைப்பற்றி இருக்கிறது.

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் ஓய்வு எப்பொழுது என ரோகித் சர்மாவிடம் கேட்டதற்கு பதில் அளித்து பேசிய அவர் “நான் ஒரு நாள் காலையில் எழும்பொழுது, நான் விளையாடுவதற்கு சரியாக இல்லை என்று நினைக்கும் பொழுது, நான் உடனடியாக ஓய்வை அறிவித்து விடுவேன். ஆனால் நான் சில வருடங்களாக மிக நன்றாக விளையாடி வருகிறேன். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் என்னுடைய கிரிக்கெட் உயர்ந்திருக்கிறது.

- Advertisement -

நான் ஸ்டார் அந்தஸ்து கொண்ட பெரிய வீரர் கிடையாது. மேலும் என்னிடம் பெரிய நம்பர்களும் கிடையாது. அந்த பெரிய ஸ்கோர் பெரிய நம்பர்கள் தேவைதான். ஆனால் நாம் இலக்கை நோக்கி விளையாடும் கலாச்சாரம் முக்கியம். நான் அணியில் இருந்து புள்ளி விவரங்களை பார்த்து விளையாடுவதை முற்றிலுமாக எடுக்க நினைக்கிறேன். இப்பொழுது நீங்கள் பார்த்தீர்கள். வீரர்கள் வெளியேறி முழு சுதந்திரத்துடன் விளையாடினார்கள். நான் ஒட்டுமொத்தமாக அணியில் இருந்து புள்ளி விபரங்களை வெளியில் எடுக்க விரும்புகிறேன்.

மக்கள் எண்களை பார்ப்பது கிடையாது. மக்கள் தனிப்பட்டவர்களின் எண்களை பார்ப்பதும் கிடையாது. நீங்கள் உங்கள் விளையாட்டை விளையாடினால், ஸ்கோர் தானாக வந்துவிடும். நீங்கள் தைரியமாக தெளிவாக இருந்தால், மற்ற விஷயங்கள் தானாகவே நடக்கும். வெளியில் நடப்பதை பார்க்க கூடாது. இங்கு 50 ரன் கிடைக்குமா? 100 ரன் கிடைக்குமா? என்று நினைக்கக் கூடாது. இதையெல்லாம் விட்டு ஆட்டத்தில் கவனம் செலுத்தினால் போதும்.

இதையும் படிங்க : சுப்மன் கில்லிடம் வம்புக்கு வந்த பேர்ஸ்டோ.. சர்ப்ராஸ் கான் செய்த தரமான சம்பவம்.. என்ன நடந்தது?

சுற்றுச்சூழலை அனுபவிப்பது, அணிக்குள் இருக்கும் உள் சூழலை அனுபவிப்பது, அணிக்குள் நாங்கள் இப்பொழுது உருவாக்கி இருக்கும் தோழமையை அனுபவிப்பது, இதுதான் எனக்கு இப்பொழுது மிக மிக முக்கியமானது” எனக் கூறியிருக்கிறார்.