சுப்மன் கில்லிடம் வம்புக்கு வந்த பேர்ஸ்டோ.. சர்ப்ராஸ் கான் செய்த தரமான சம்பவம்.. என்ன நடந்தது?

0
664
Sarfaraz

இன்று தரம்சாலா மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்திருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இந்திய கிரிக்கெட் அணிக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், மேலும் தனிப்பட்ட வீரர்களுக்கும் மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.

நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை வைத்து வென்ற காரணத்தினால், இந்திய எதிர்கால கிரிக்கெட் குறிப்பு இந்திய கிரிக்கெட் வாரியம் நிம்மதி அடைந்திருக்கிறது. மேலும் இந்திய அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட இளம் வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காக சம்பளத்தையும் அதிகரித்து இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்தத் தொடரின் ஆரம்பத்திற்கு முன்னால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் சுற்றுப்பயணங்கள் இந்திய இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுக்கு சரியானதாக அமையவில்லை.

மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் மற்றும் இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸ் மிக மோசமாக அமைந்தது. இதன் காரணமாக அவர் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார் என்பது உறுதியான பேச்சாகவே இருந்தது.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முக்கியமான நேரத்தில் இரண்டு முக்கியமான அரைசதங்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். ஐந்தாவது போட்டியில் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவி தன்னுடைய இடத்தையும் உறுதி செய்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சனை செட்டில் ஆக விடாமல் அதிரடியாக தாக்கி விளையாடி அவருக்கு பெரும் தொந்தரவை கில் கொடுத்தார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே சுவாரசியமான பேச்சுவார்த்தை ஒன்று போயிருந்தது. அது குறித்து கேட்ட பொழுது அது தங்களுக்குள்ளே இருக்கட்டும் என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில் இன்று பேட்டிங் செய்ய வந்த பேர்ஸ்டோ கில்லிடம் “நீ ஆண்டர்சன் சோர்வாக இருப்பதைப் பற்றி என்னசொன்னாய்? ஆனால் அவர் உன்னை அவுட் செய்து வெளியே அனுப்பினார்” என்று கூறினார்.

இதற்கு பதில் கூறிய கில் “அது இருக்கட்டும். அவர் நான் சதம் அடித்த பின்னால்தான் என்னை அவுட் செய்தார். ஆமாம் இங்கு நீ எவ்வளவு ரன் அடித்தாய்?” என்று திருப்பி பதிலடி கொடுத்தார்.

இதையும் படியுங்க : 100வது டெஸ்ட்.. உலக கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை செய்த அஸ்வின்.. அதிரடி ரெக்கார்ட்

இந்த நேரத்தில் இவர்கள் பேச்சுவார்த்தையில் உள்ளே வந்த சர்பராஸ் கான் அதிரடியாக ” அடுத்தது என்னவோ கொஞ்சம் ரன்தான். ஆனால் குதிப்பது மட்டும்தான் அதிகமாக இருக்கிறது” என்று தடாலடியான பதில் தந்திருக்கிறார். தற்பொழுது இது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.