“டெஸ்ட் கிரிக்கெட்ல இவங்களுக்கு வாய்ப்பு தர முடியாது.. காரணம் இதுதான்” – ரோகித் சர்மா வெளிப்படை பேச்சு

0
591
Rohit

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பல முன்னணி வீரர்கள் கிடைக்காத பொழுது இளம் வீரர்களை வைத்து விளையாடி கேப்டன் ரோஹித் சர்மா தொடரை வென்று இருக்கிறார்.

இந்த தொடரில் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால், கில், துருவ் ஜுரல், சர்பராஸ் கான், ஆகாஷ் தீப் என வாய்ப்பு பெற்ற இளம் வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு இந்திய இளம் அணியின் இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. எதிர்கால இந்திய அணியை அமைப்பதில் இது மிகப்பெரிய உதவி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்காமல் ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் அளித்து சில பல வீரர்கள் தயாராகி வருவது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கவலை அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது.

எனவே இதைத் தடுப்பதற்கு என பல கடுமையான அறிவிப்புகளை பிசிசிஐ செய்திருந்தது. மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் போன்று உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்கு மதிப்பளிக்காமல், ஐபிஎல் தொடருக்கு தயாராகக் கூடியவர்களை, இந்திய அணிக்கான தேர்வில் இருந்து புறக்கணிப்பது மற்றும் சம்பள பட்டியலில் இருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்பொழுது ரோகித் சர்மா மறைமுகமாக இதுகுறித்து பேசும்பொழுது ” இது மிகவும் கடினமான ஒரு கிரிக்கெட் வடிவம் இதில் நீங்கள் சிறப்பு விளங்க விரும்பினால், நீங்கள் வெற்றியை விரும்பினால் உங்களுக்கு பசி இருக்க வேண்டும். அப்படியான பசி உள்ளவர்களுக்கு மட்டுமே நாங்கள் வாய்ப்பு கொடுப்போம். டெஸ்ட் விளையாட விளையாட யாருக்கு அந்த பசி இல்லை என்பதை நாங்களே தெரிந்து கொள்வோம்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு பசி கொண்டிருக்கும் வீரர்கள், யார் கடினமான அழுத்தமான சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்படக் கூடியவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதையும் படிங்க : “அண்ணன் இல்லாமையே பின்னிட்டிங்க.. பசங்களா வாழ்த்துக்கள்” – விராட் கோலி பாராட்டு

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கான பசி இல்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது. அதேபோல் வாய்ப்புகளைப் பயன்படுத்தாவிட்டால் நீங்கள் வெளியேறி விடுவீர்கள். யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அணியின் வெற்றிக்கு உதவுகிறார்களோ அவர்கள் மீது கவனம் திரும்பிவிடும். இது கடின உழைப்பை கொடுக்க வேண்டிய கிரிக்கெட் வடிவம்” எனக் கூறியிருக்கிறார்.