என் சாதனைகளை உடைக்க.. விடியற்காலை 4 மணி வரை ஐடியா கேட்ட இந்திய வீரர் – லாரா வெளியிட்ட சுவாரசிய தகவல்

0
165
Lara

இந்த ஆண்டு அடுத்த மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து இந்திய அணிக்குறித்து நிறைய கருத்துக்களை லெஜெண்ட் பேட்ஸ்மேன் பிரையன் லாரா பேசி வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக நாற்சதம் அடித்தவர் என்கின்ற அபூர்வ சாதனையை பிரையன் லாரா 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக படைத்திருந்தார். மேலும் இதுவரையில் இந்த சாதனையை செய்தவர் அவர் ஒருவராக மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வருகிறார். மேலும் அவர் முதல் தரப் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 5 சதங்கள் அடித்தவர் என்கின்ற சாதனையையும் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து லாரா கூறும்பொழுது “எனது சாதனைகளுக்கு அச்சுறுத்தல் வந்துள்ளதாக நான் உணர்கிறேன். எனது சாதனை உடைப்பதற்கான அருமையான வாய்ப்பு ஜெய்ஸ்வாலுக்கு இருக்கிறது. அவருக்கு ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு இரட்டை சத்தங்கள் வந்திருக்கிறது. அவருக்கு அதற்கான திறமைகள் இருக்கிறது. அவர் அந்த அளவிற்கு சிறந்த பேட்ஸ்மேன்.

ஜெய்ஸ்வால் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவர் மிகச்சிறந்த இளம் கிரிக்கெட் வீரர். அவர் மிகவும் பணிவானவர், கற்றுக்கொள்ள எப்பொழுதும் ஆர்வமாகவும் தயாராகவும் இருக்கிறார். நான் கடந்த ஆண்டு அவரை முதல் முறையாக சந்தித்த பொழுதே அவருடன் மிகவும் இணைந்து விட்டதாக உணர்ந்தேன்.

கடந்த ஆண்டில் ராஜஸ்தான் ஐதராபாத் போட்டிக்கு பின்பு பட்லரை பார்ப்பதற்காக நான் ஹோட்டலுக்கு சென்றேன். அப்பொழுதுதான் நான் முதல்முறையாக ஜெய்ஸ்வாலை பார்த்தேன். நான் உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன், அன்று அதிகாலை 4 மணிக்குதான் ஹோட்டலை விட்டு வெளியே வந்தேன். அவ்வளவு விஷயங்கள் குறித்து என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

- Advertisement -

இதையும் படிங்க: அடுத்த வருஷம் மும்பை இந்தியன்ஸ்ல ரோகித் இருக்க மாட்டார்.. இந்த டீமுக்கு வரனும் – வாசிம் அக்ரம் கருத்து

அவர் தொடர்ந்து மேலும் மேலும் கேட்க விரும்பினார். இது அவரது அற்புதமான பண்புகளில் ஒன்று. முடிந்தவரை அவர் கற்றுக்கொள்ள விரும்புகிறார். எங்கள் உரையாடல் அவரை சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்றுவதாக இருந்தது. நான் யாருக்கும் என்னுடைய நம்பரை கொடுக்க தயாராக இருக்கிறேன். கிரிக்கெட் பற்றி பேசுவது மகிழ்ச்சியானது” என்று கூறியிருக்கிறார்.