“அண்ணன் இல்லாமையே பின்னிட்டிங்க.. பசங்களா வாழ்த்துக்கள்” – விராட் கோலி பாராட்டு

0
1445
Virat

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருப்பது, இந்திய கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

முதலில் இந்த தொடரில் விராட் கோலி, முகமது சமி, கேஎல்.ராகுல் என முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்திய அணி தொடரை கைப்பற்றி இருக்கிறது என்பது முக்கியமான காரணம்.

- Advertisement -

அடுத்து இந்த தொடரில் இளம் வீரர்கள் மிகச் சிறப்பான முறையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதிலும் இந்திய அணி நெருக்கடியான நிலையில் இருந்த பொழுது கொஞ்சமும் அசராமல் அழுத்தத்திற்கு பணியாமல் விளையாடி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இப்படி மூத்த வீரர்கள் இல்லாத பொழுது, இளம் வீரர்கள் அற்புதமான கேரக்டரை வெளிப்படுத்தி தொடரை வென்று இருக்கின்ற காரணத்தினால், இந்திய கிரிக்கெட் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது.

இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. இன்றைய வெற்றிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் வெளிப்படுத்தி வரும் மகிழ்ச்சியில் இதைப் பார்க்க முடிகிறது.

- Advertisement -

எனவே இந்திய கிரிக்கெட் எதிர்காலத்தைப் பற்றி பெரிய கவலை ஏதும் கொள்ளத் தேவையில்லை என்பதாக இந்த வெற்றி அமைந்திருக்கிறது. ஏனென்றால் இந்திய பேட்டிங் யூனிட்டில் மிகப்பெரிய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தங்களுடைய கடைசிக் கட்டத்தில் இருக்கிறார்கள்.

இந்த தொடரில் தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி விளையாடவில்லை என்பது நாம் அறிந்ததே. இந்த நிலையில் தொடரை கைப்பற்றி இருக்கும் இளம் இந்திய அணிக்கு அவர் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க : “ஆந்திர கிரிக்கெட்டில் அரசியல்தான் இருக்கிறது.. இனி நான் விளையாட மாட்டேன்” – ஹனுமான் விகாரி அறிவிப்பு

விராட் கோலி தன்னுடைய வாழ்வில் கூறும் பொழுது “ஆமாம்.. எங்களுடைய இளம் அணியின் அற்புதமான சீரிஸ் வெற்றி இது. இந்த வெற்றியை துணிச்சல் மற்றும் மன உறுதிப்பாட்டை காட்டுகிறது” என்று தெரிவித்திருக்கிறார். மேலும் தற்போது இந்திய அணியின் வெற்றி பல முன்னாள் வீரர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.