ரோகித் கோலி யாருமே கிடையாது.. எனக்கு பிடிச்ச இந்திய வீரர் இப்ப இவர்தான் – பாட் கம்மின்ஸ் விருப்பம்

0
60
Cummins

தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகவும் செல்வாக்கு பெற்ற வீரராக பாட் கம்மின்ஸ் உருவாக்கிக் கொண்டு வருகிறார். கேப்டன் பொறுப்பில் அவரது அணுகுமுறைகள் பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியில் தனக்கு பிடித்த வீரர் யார் என்று அவர் கூறியிருக்கிறார்.

2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஆஸ்திரேலியா அணி தன் மதிப்பை உலக கிரிக்கெட்டில் இழந்தது. மேலும் அந்த நேரத்தில் வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் ஓராண்டு காலம் நடைபெற்றதால், ஆஸ்திரேலியா அணியும் களத்தில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த நேரத்தில் ஜஸ்டின் லாங்கர் பயிற்சியாளராக வந்து இங்கிலாந்தில் ஆசஸ் தொடர் மற்றும் 2021 ஆம் ஆண்டு யுனைடெட் அரபு எமிரேடில் டி20 உலகக்கோப்பை தொடர் என வென்று, சரிந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை மீண்டும் உயிர்பிக்க செய்தார். எனவே அவர் தொடர்ந்து பயிற்சியாளர் பொறுப்பில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வீரர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டு விலகினார்.

இந்த நேரத்தில் கேப்டனாக பாட் கம்மின்ஸ் தன்னுடைய அணி வீரர்களின் மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருந்தார். இது அவர் மீது வீரர்களிடையே பெரிய மரியாதையை உண்டாக்கியது. வீரர்கள் தங்களுடைய கேப்டனுக்காக எது வேண்டுமானாலும் செய்கின்ற மனநிலைக்கு வந்தார்கள். மேலும் பேட் கம்மின்ஸ் பழைய ஆஸ்திரேலிய ஆக்ரோஷ அணுகு முறையை வேண்டாம் என்று விலக்கி வைத்தார். இது மற்ற நாட்டு ரசிகர்களுக்கும் பிடிக்கும் ஒன்றாக மாறியது.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்தில் ஆசஸ் தொடர், இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் என அசத்தலான வெற்றிகளை அவர் தலைமையில் ஆஸ்திரேலியா படைத்தது. இந்தியாவுக்கு எதிராக மட்டும் இரண்டு உலகக்கோப்பைகளை அவர் இறுதிப் போட்டியில் வென்றிருக்கிறார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவருடைய பெயர் எப்பொழுதும் நினைவில் இருக்கும் படியான சம்பவங்கள் அமைந்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் பேட்டிங் இந்த லெவல்ல இருக்கு.. இந்த பையனோட ஸ்பெஷல் குவாலிட்டியே இதுதான் – மேத்யூ ஹைடன் பாராட்டு

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் ஒரு நிகழ்ச்சியில் இந்திய அணியில் அவருக்கு மிகவும் பிடித்த வீரர் யார் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பாட் கம்மின்ஸ் ” நான் ஒரு வேகப்பந்துவீச்சாளர். எனவே நான் ஒரு வேகப்பந்துவீச்சாளர் இடமே செல்கிறேன். எனக்கு இந்திய அணியில் பிடித்த வீரர் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா” என்று கூறியிருக்கிறார்.