சிவம் துபே பாவம்.. ஜெய்ஸ்வாலுக்கு டி20 உலககோப்பை இந்திய அணியில் இடமில்லையா? – ரோஹித் சர்மா பேச்சு

0
1280
Rohit

நடப்பு 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் நாடுகள் உலகக்கோப்பை அணியை மே ஒன்றாம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை இந்திய அணி தேர்வு குறித்து அஜித் அகர்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருடன் ரோகித் சர்மா சந்திப்பை நடத்தினாரா? என்பது குறித்து பேசி இருக்கிறார்.

நேற்று சமூக வலைதளத்தில் ரோகித் சர்மா, அஜித் அகர்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் சந்தித்துக் கொண்டதாகவும், அதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் துவக்க வீரர்களாக டி20 உலகக் கோப்பையில் களமிறங்குவார்கள் என்றும், ஜெய்ஸ்வாலுக்கு இடம் இல்லை என்றும், ரியான் பராக் அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும், விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் இடம் பெறுவார்கள் என்றும்தகவல்கள் பரவியது.

- Advertisement -

இன்று ஆடம் கில்கிரிஸ்ட் உடன் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பாட்காஸ்ட் ஒன்றில் கலந்து கொண்டு பல முக்கியமான விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில் இப்படியான சந்திப்பு நடைபெற்றதா? என்பது குறித்தும் மிகத் தெளிவாக தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ரோஹித் சர்மா கூறும் பொழுது “நான் ஐபிஎல் தொடரில் இருக்கிறேன். அஜித் அகர்கர் துபாயில் கோல்ப் விளையாடிக் கொண்டிருக்கிறார். ராகுல் டிராவிட் தங்கள் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவதை பெங்களூரில் பார்த்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் எந்தவித சந்திப்பையும் மூன்று பேரும் நடத்தவில்லை. எங்கள் மூன்று பேரில் ஒருவர் கேமரா முன் வராமல், இப்படியான சந்திப்புகள் நடைபெற்றது என்று வருகின்ற செய்திகள் அனைத்தும் போலியானது.

ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதியில் எனக்கு பெரிய உடன்பாடு எப்பொழுதும் கிடையாது. அந்த விதி கிரிக்கெட்டை சுவாரசியப்படுத்துவதற்காக மட்டுமே கொண்டுவரப்பட்டது. ஆனால் கிரிக்கெட் என்பது 11 பேரை மட்டுமே வைத்து விளையாடக்கூடியது. 12 பேரை வைத்து விளையாடக்கூடியது அல்ல.

- Advertisement -

இதையும் படிங்க : கான்வே இடத்திற்கு புதிய வீரர்.. ஆனால் அவர் முஸ்தஃபிஷருக்கு மாற்று வீரர்.. சிஎஸ்கே போட்ட மாஸ்டர் பிளான்

இம்பேக்ட் பிளேயர் விதியால் சிவம் துபே போன்ற ஒரு வீரர் வெறும் பேட்ஸ்மேன் ஆக மட்டுமே விளையாடுகிறார். அவருக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைப்பதில்லை. இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது கிடையாது. பொழுதுபோக்கிற்காக கொண்டுவரப்பட்ட விதி என்றாலும் கூட, கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இது உதவாது” என்று கூறியிருக்கிறார்.