கான்வே இடத்திற்கு புதிய வீரர்.. ஆனால் அவர் முஸ்தஃபிஷருக்கு மாற்று வீரர்.. சிஎஸ்கே போட்ட மாஸ்டர் பிளான்

0
1146
CSK

இந்தியாவில் தற்பொழுது நடைபெற்று வரும் 17 வது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் இருந்து காயத்தின் காரணமாக நியூசிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே முழுமையாக விலகி இருக்கிறார். அவருடைய இடத்திற்கு இங்கிலாந்து வீரர் ஒருவரை சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முதல் வாரத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் கான்வே கால் விரலில் காயம் அடைந்தார். இதன் காரணமாக அவரால் ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றின் போது தான் சிஎஸ்கே அணிக்கு திரும்ப முடியும் என்கின்ற நிலை இருந்தது.

- Advertisement -

இருந்தபோதிலும் சிஎஸ்கே அணி நிர்வாகம் அவரை அணியில் இருந்து விடுவிக்கவில்லை. தற்போது அவர் முழுமையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தெரிந்த காரணத்தினால், இங்கிலாந்தைச் சேர்ந்த வலது கை வேகப்பந்துவீச்சாளர் 36 வயதான ரிச்சர்டு கிளேசனை 50 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இவர் இங்கிலாந்து அணிக்காக மொத்தம் ஆறு டி20 போட்டிகள் விளையாடி மொத்தம் ஒன்பது விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மேலும் ஒட்டுமொத்தமாக 90 டி20 போட்டிகள் விளையாடி 101 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். சிஎஸ்கே அணி நிர்வாகம் இவரை ஒப்பந்தம் செய்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

சிஎஸ்கே அணி நிர்வாகம் பேட்ஸ்மேன் கான்கே இடத்திற்கு ஒரு வேகப்பந்து வீச்சாளரை வாங்கி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறது. முஸ்தபிசுர் ரஹ்மான் வருகின்றமே இரண்டாம் தேதி உடன் பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கு திரும்ப இருக்கிறார். அதுவரையில் அவர் சிஎஸ்கே அணியில் தொடர்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : பட்லர் சூரியகுமார் கிடையாது.. டி20 கிரிக்கெட்டில் இந்த வீரர்தான் இரட்டை சதம் அடிப்பார் – கேன் வில்லியம்சன் கணிப்பு

இதன் காரணமாக சிஎஸ்கே அணி நிர்வாகம் தற்பொழுது அணியில் இருந்து கிளம்ப இருக்கும் முஸ்தபிசுர் ரஹ்மான் இடத்துக்கு அவர் அணியில் இருக்கும் பொழுதே மாற்றுவீரரை வாங்கி விட்டது. இதன் மூலம் முன்கூட்டியே சிஎஸ்கே அணியுடன் சம்பந்தப்பட்ட இங்கிலாந்து வீரர் இணைவதால், அவரால் இந்திய சூழ்நிலைக்கு சீக்கிரம் பழக முடிவதோடு, சிஎஸ்கே அணியின் கலாச்சாரத்திற்கும் சீக்கிரம் பழக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.