“நீங்க டிவி மேட்ச்ல பார்க்கிற எதுவுமே உண்மை கிடையாது.. நான் வேணும்னே செய்யல” – ரோகித் சர்மா பேட்டி

0
287
Rohit

இந்திய அணிக்கான மூன்று வடிவ கேப்டன் பொறுப்பில் இருந்தும் 2021 இறுதியில் விராட் கோலி விலகிக் கொண்டார். இதே நேரத்தில் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி பதவி காலம் முடிவுக்கு வந்திருந்தது.

இதற்குப் பிறகு புதிய கேப்டனாக இந்திய கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திற்கும் ரோஹித் சர்மா, புதிய பயிற்சியாளராக இந்திய முன்னாள் லெஜெண்ட் வீரர் ராகுல் டிராவிட் இருவரும் கொண்டுவரப்பட்டார்கள்.

- Advertisement -

இதற்கு முன்பாக புதிய வீரர்கள் புதிய பரிசோதனை முயற்சிகள் என்று எதுவும் இல்லாமல் சென்று கொண்டு இருந்த இந்திய கிரிக்கெட்டில், அதற்குப் பிறகு மிக அதிகமான பரிசோதனை முயற்சிகள் செய்யப்பட்டது. மிக அதிகமான புதிய வீரர்கள் அணிக்குள் உள்ளே கொண்டுவரப்பட்டார்கள்.

இதற்கான பலன் கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் ஆரம்பித்து தற்பொழுது இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தெரிய வருகிறது.

பொதுவாக கேப்டன் ரோஹித் சர்மா இளம் வீரர்களுடன் மிகவும் இயல்பாக நெருக்கமாக பழகக் கூடியவர். களத்தில் அவர் பேசக் கூடியது எல்லாம் எப்பொழுதும் வைரலாக கூடிய அளவுக்கு இருக்கும். இதுகுறித்து ரோஹித் சர்மா இன்று மனம் திறந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது சம்பந்தமாக அவர் பேசும் பொழுது “நான் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ரன் இல்லாமல் ஆட்டம் இழந்திருந்தேன். மூன்றாவது போட்டியில் அம்பயராக இருந்த வீரு என் பேட்டில் பட்டு சென்ற பந்துக்கு லெக்-பை கொடுத்துவிட்டார்.

நீங்கள் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ரன் இல்லாமல் ஆட்டம் இழந்திருக்கும் பொழுது, அடுத்த போட்டியில் முதல் ரன் அடிப்பது மிகவும் முக்கியமானது. நான் எப்பொழுதும் விளையாடும் பொழுது ஸ்கோர் போர்டை பார்க்க மாட்டேன்.

ஆனால் அன்றைய போட்டியில் நான் ஓவருக்கு நடுவில் ஸ்கோர் போர்டை பார்த்த பொழுது என் பெயருக்கு பக்கத்தில் பூஜ்ஜியம் இருந்தது. என் பேட்டில் பட்டு பவுண்டரி சென்றும் எனக்கு ஏன் ரன் வழங்கப்படவில்லை, நான் ஏற்கனவே இரண்டு பூஜ்ஜியத்தில் இருக்கிறேன் என்று அப்போது அம்பயரிடம் கேட்டேன்.

இதையும் படிங்க : “சேவாக் கிடையாது.. கவாஸ்கருக்கு அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்ல இந்த தமிழக பையன்தான்” – ரவி சாஸ்திரி கருத்து

நான் பேசக்கூடிய விஷயங்கள் ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகிறது. ஆனால் அதெல்லாம் நான் பேச வேண்டும் என்று பேசுவது கிடையாது. இப்போது நான் கேப்டனாக இருப்பதால் டிஆர்எஸ் முடிவுகள் எடுப்பதற்கு ஸ்லிப்பில் இருக்கிறேன். இதனால் என்னால் எல்லா பீல்டரையும் பார்க்க முடிகிறது. அப்பொழுது டி ஆர் எஸ் குறித்து எல்லோருடனும் பேசுகிறேன் அது பதிவாகி விடுகிறது” என்று கூறி இருக்கிறார்.