“சேவாக் கிடையாது.. கவாஸ்கருக்கு அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்ல இந்த தமிழக பையன்தான்” – ரவி சாஸ்திரி கருத்து

0
196
Sehwag

இந்திய கிரிக்கெட் என்று இல்லாமல் மொத்தமாக உலக கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், சிறந்த டெஸ்ட் துவக்க ஆட்டக்காரர்களில் இந்தியாவின் லெஜெண்ட் சுனில் கவாஸ்கருக்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது.

சுனில் கவாஸ்கர் தான் முதன் முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களைக் கடந்த வீரராக இருந்தார். அவர் மொத்தமாக 34 சர்வதேச டெஸ்ட் சதங்கள் உடன் 10,122 ரன்கள் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

இவருக்கு அடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் பந்தில் இருந்து அடித்து நொறுக்கிய ஷேவாக்தான் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த துவக்க ஆட்டக்காரராக இருக்க முடியும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் துவக்க வீரராக உருவாக்கிய தாக்கம், இன்று வரையில் பெரிதாக யாரிடமும் பார்க்க முடிவதில்லை.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியான முறையில் விளையாடியிருந்தாலும் கூட, சேவாக் இரண்டு முறை முச்சதங்கள் அடித்த ஒரே இந்திய பேட்ஸ்மேனாக இருக்கிறார். அவரால் பெரிய இன்னிங்ஸ் விளையாட முடிந்திருக்கிறது. எனவே டெஸ்ட் கிரிக்கெட் துவக்க ஆட்டக்காரர்களில் இந்தியாவில் கவாஸ்கருக்கு அடுத்து சேவாக் பெயரைத்தான் எல்லோருமே சொல்லுவார்கள்.

இப்படியான நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளராகவும் இருந்த ரவி சாஸ்திரி சுனில் கவாஸ்கருக்கு அடுத்து, இந்திய கிரிக்கெட்டின் சிறந்த டெஸ்ட் துவக்க ஆட்டக்காரராக தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜயை கூறியிருக்கிறார். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து பரத் அருண் கூறும் பொழுது “எனக்கு சிறுவயதில் இருந்து தெரிந்த ஒரு பேட்ஸ்மேன் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது முரளி விஜய். அவர் நான் கல்லூரியில் சந்தித்த ஒரு வீரர். நான் அவரை ஒரு ஃபர்ஸ்ட் டிவிஷன் டீமுக்கு சிபாரிசு செய்தேன். அப்போதுதான் அவருடைய பயணம் ஆரம்பித்தது.

இதையும் படிங்க : “தரம்சாலா பிட்ச் எதுனு கண்டுபிடிச்சிட்டோம்.. ஆனா இவங்கதான் கஷ்டப்பட்டு இருக்காங்க” – பேர்ஸ்டோ பேச்சு

சுனில் கவாஸ்கருக்கு பிறகு இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகச்சிறந்த துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் தான் என்று ரவி சாஸ்திரி அடிக்கடி சொல்வார். இதுவே முரளி விஜய்க்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. எனக்கு பிடித்த வீரர்களில் முரளி விஜயும் ஒருவர்” என்று கூறி இருக்கிறார்.