கடைசி ஓவரில் கேப்டன் பொறுப்பை எடுத்த ரோகித்.. ஹர்திக்கை புறக்கணித்த ஆகாஷ் மத்துவால் – களத்தில் என்ன நடந்தது?

0
1024
Hardik

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா கொண்டுவரப்பட்டார். ஆனாலும் கூட மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவின் செல்வாக்கு மிகப்பெரியதாக இருந்து வருகிறது. நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக அவரே கடைசி கட்டத்தில் கேப்டன் போல செயல்பட்டார்.

நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 70 ரன்கள் தாண்டும் பொழுது ஆறு விக்கெட்டுகளை இழந்து விட்டது. அங்கிருந்து அதிரடியாக விளையாடிய நம்பிக்கை நட்சத்திரம் ஷஷாங்க் சிங் 111 ரன்கள் இருக்கும் பொழுது ஆட்டம் இழந்து விட்டார். எனவே எப்படியும் மும்பை இந்தியன்ஸ் எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இப்படியான சூழ்நிலையில் பேட்டிங் செய்ய வந்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் வீரர் அசுதோஸ் சர்மா ஏழு சிக்ஸர்கள் உடன் 28 பந்தில் 61 ரன்கள் எடுத்து மொத்த போட்டியையும் மிகப்பெரிய பரபரப்புக்கு எடுத்துச் சென்றுவிட்டார். எதிர்பாராத விதத்தில் அவர் ஆட்டம் இழந்தாலும் கூட, கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு ஒரு விக்கெட் கைவசம் இருக்க 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

இந்த நிலையில் ஓரளவுக்கு நன்றாகவே பேட்டிங் செய்யக்கூடிய ரபாடா மற்றும் ஹர்சல் படேல் இருவரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு களத்தில் இருந்தார்கள். ஹர்திக் பாண்டியா வீசிய 19 வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ரபடா ஒரு பெரிய சிக்சர் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஒரு விக்கெட்டை வைத்துக்கொண்டு கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுக்க முடிந்த நிலைமைதான் இருந்தது.

இப்படியான சூழ்நிலையில் இருபதாவது ஓவரை கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகாஷ் மதுவாலுக்கு கொடுத்தார். அப்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த வீரர்கள் சிறு சிறு குழுவாக தனித்தனியாக என்ன செய்யலாம்? எப்படியான ஃபீல்டிங் அமைக்கலாம் என தங்களுக்குள் மைதானத்தில் ஆலோசனை செய்து கொண்டு இருந்தார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : 6 போட்டி வெறும் 135 ரன்.. டேரில் மிட்சலுக்கு இன்று வாய்ப்பு தரப்படுமா? – பிளமிங் பதில்

இந்த நேரத்தில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஹர்திக் பாண்டியா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆகாஷ் மதுவாலிடம் சென்று, பீல்டிங்கை தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்ற சொன்னார். அவர் சில யோசனைகளை கைகளை காட்டி கூறினார். பிறகு அது போலவே பீல்டிங் அமைக்கப்பட்டது. ரோகித் சர்மா உள்ளே வந்து யோசனைகள் கூற ஆரம்பித்ததும், ஹர்திக் பாண்டியா சொல்வதை கேட்பதை நிறுத்திவிட்டு ஆகாஷ் மதுவால் தன் முன்னாள் கேப்டன் சொல்வதை கேட்க ஆரம்பித்து விட்டார். இந்த சம்பவம் தற்பொழுது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.