6 போட்டி வெறும் 135 ரன்.. டேரில் மிட்சலுக்கு இன்று வாய்ப்பு தரப்படுமா? – பிளமிங் பதில்

0
349
Fleming

இன்று லக்னோ ஏகனா மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் சில முக்கியமான அணியின் பிரச்சனைகள் குறித்து பேசி இருக்கிறார்.

சென்னை அணி கடந்த போட்டியில் மும்பை அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த போட்டியில் பேட்டிங்கில் சிவம் துபே, ருதுராஜ் மற்றும் தோனி ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்கள். பந்துவீச்சில் அனைவருமே குறிப்பிட தகுந்த அளவு செயல்பட்டிருந்தார்கள்.

- Advertisement -

ஆனால் தொடர்ந்து அணியில் வாய்ப்பு பெற்று வரும் நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்சல் ஆறு விளையாடி வெறும் 135 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இதன் காரணமாக அவரை இம்பேக்ட் பிளேயர் இடத்திற்கு கொண்டு சென்று தேவைப்பட்டால் பயன்படுத்துவார்களா? என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஒருவேளை மற்ற பேட்ஸ்மேன்கள் ஆடி முடித்தால் அவருடைய இடத்தில் வேறு பந்துவீச்சாளரை விளையாட வைக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேசும் பொழுது “தீபக் சகருக்கு ஒரு சிறிய காயம் இருக்கிறது எனவே நாங்கள் அவருக்கு ஓய்வு கொடுத்திருக்கிறோம். அதே சமயத்தில் சர்துல் தாக்கூர் நல்ல முறையில் செயல்பட்டார்.

எங்களைப் பொருத்தவரை லக்னோ அணியை நாங்கள் மிக உயர்வாக மதிப்பிடுகிறோம். அவர்கள் மிகவும் வலிமையான அணி. கடந்த போட்டியின் வெற்றியில் இருந்து பெற்ற வேகத்தை பற்றி நாங்கள் எப்பொழுதும் அதிகம் பேசுவது கிடையாது. நாங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் ஏற்கனவே நாங்கள் சிறப்பாக செய்ததை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : சிஎஸ்கே போட்டி.. 156 கிமீ வேக மயங்க் யாதவ் ஆடுவாரா.? – லக்னோ கோச் லான்ஸ் க்ளூஸனர் பேட்டி

நீங்கள் ஐபிஎல் தொடரில் வசதியாக இருப்பதாக நினைத்தால் நீங்கள் தவறு செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இங்கு சுகமாக இருப்பதற்கு எல்லாம் நேரம் கிடையாது. டேரில் மிட்சல் நட்சத்திர பங்களிப்பை தரவில்லை. ஆனால் நாங்கள் ஒரு வீரரை அதிகப்படியாக ஆதரிக்க விரும்புகிறோம். நாங்கள் ஆட்டநாயகன் விருது வாங்கும் பங்களிப்பை எதிர்பார்ப்பதில்லை. நாங்கள் அதைத் தாண்டி வீரர்களை மதிக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.