வேண்டாம் போதும் விட்டுருங்க.. ஹர்திக் பாண்டியாவுக்காக கேட்ட ரோகித் சர்மா.. நெகிழ்ச்சியான சம்பவம்

0
17602
Rohit

நடப்பு 17 வது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற பொழுது இருந்தே, மும்பை இந்தியன்ஸ் அணியை சுற்றி நிறைய குழப்பங்கள் பரவ ஆரம்பித்தது. முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் உள்ளே கொண்டு வந்தது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் டிரேடிங் முறை இருக்கவே கூடாது என்கின்ற விவாதம் உருவானது.மேலும் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ரோகித் சர்மாவை நீக்கி புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்தது பெரிய பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு மைதானத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கடுமையான சத்தம் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தார்கள். இது மும்பை வான்கடே மைதானத்தில் தொடரக்கூடாது என மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கருதியது.

- Advertisement -

இன்று சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வெல்வதின் மூலம், எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு கட்டலாம் என மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பு நினைத்திருந்தது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர்கள் நினைத்தது போல் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை எதுவுமே நடக்கவில்லை.

இப்படியான நிலையில் இருபது ஓவர்களில் வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்து, மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 15.3 ஓவரில் இலக்கை எட்ட விட்டு, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சொந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி என்று சந்தித்தது. ஹர்திக் பாண்டியா மீதான எதிர்ப்புகளை இன்னும் அதிகரிக்கும் வகையில் இந்த தோல்வி அமைந்திருக்கிறது.

இன்று டாஸ் நிகழ்வுக்கு ஹர்திக் பாண்டியா வரும்பொழுது அவருக்கு சொந்த மைதானத்தில் இருந்த ரசிகர்களால் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. டாஸ் நிகழ்வை ஒருங்கிணைத்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேட்டுக் கொண்டும் ரசிகர்கள் அமைதி அடையவில்லை. இந்திய நட்சத்திர வீரர்களுக்கு இந்தியாவில் இப்படி தொடர்ந்து நடப்பது இதுதான் முதல் முறை.

- Advertisement -

இதையும் படிங்க : எங்க அப்பா வீட்ல இருந்து முக்கியமான ஒரு வேலை செய்யறார்.. ஆரஞ்ச் கேப் காரணம் இதுதான் – ரியான் பராக் பேட்டி

இதற்கு அடுத்து மும்பை பந்துவீச்சில் இருந்த பொழுது தொடர்ந்து ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்கள் கூச்சலிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள். அப்போது எல்லையில் பீல்டிங் நின்ற முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா கைகளை எடுத்து வணங்கி “வேண்டாம் விட்டு விடுங்கள் போதும். அமைதியாக இருங்கள்” என்று சைகை செய்தார். அதற்குப் பிறகு கூட்டம் ஓரளவுக்கு அமைதி அடைந்தது. தற்பொழுது ஹர்திக் பாண்டியாவுக்காக ரோஹித் சர்மா கேட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது.