எங்க அப்பா வீட்ல இருந்து முக்கியமான ஒரு வேலை செய்யறார்.. ஆரஞ்ச் கேப் காரணம் இதுதான் – ரியான் பராக் பேட்டி

0
322
Riyan

இன்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தங்களது மூன்றாவது போட்டியில் மோதிக்கொண்டன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. சொந்த மைதானத்தில் விளையாடுவதால் மும்பை அணி மிகவும் உற்சாகமாக இருந்தது. ஆனால் கடைசியில் சோகம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துக் கொண்டது. ஆரம்ப முதலே விக்கெட்டுகளை அள்ளிக் கொடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. டிரெண்ட் போல்ட், சாகல், பர்கர் மூன்று பேரும் பந்துவீச்சில் அசத்தினார்கள். அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 34 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பேட்டிங்கில் நல்ல பார்முக்கு வந்திருக்கும் இளம் வீரர் ரியான் பராக் 39 பந்தில் ஆட்டம் இழக்காமல் 54 ரன்கள் எடுத்து, அணியை 15.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது மூன்றாவது தோல்வி என்பதால் பத்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இன்றைய போட்டியில் 54 ரன்கள் அடித்த ரியான் பராக் மொத்தம் 181 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். விராட் கோலியின் 81 ரன்கள் எடுத்திருந்த போதும், இவருடைய ஆவரேஜ் 181 என்று ஆச்சரிய படத்தக்க வகையில் அதிகமாக இருந்ததால், இவருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்பட்டது. ஹென்றி கிளாஸன் 163, ஷிகர் தவான் 137, டேவிட் வார்னர் 130 ரன்கள் எடுத்து முதல் ஐந்து இடங்களில் இருக்கிறார்கள்.

ஆரஞ்சு தொப்பியை வென்ற ரியான் பராக் பேசும் பொழுது “நான் எந்த விஷயங்களையும் மாற்றவில்லை. நான் விஷயங்களை எளிமையாக வைத்துக் கொண்டேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்த பொழுது, பந்தை பார் அடி என எளிமையாக இலக்கை வைத்துக் கொண்டேன். இது ஒரு வேடிக்கையான விஷயம்தான். நான் உள்நாட்டு கிரிக்கெட்டில் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்கிறேன். இதுதான் எனக்கு சரியாக இருக்கிறது. இன்றும் பட்லர் ஆட்டம் இழந்ததும் நான்காவது இடத்தில் என்னுடைய வழக்கமான சூழ்நிலையில் உள்ளே சென்றேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் தொடரில் திடீரென பெயரை மாற்றிய பட்லர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. காரணம் என்ன?

ஐபிஎல் தொடரில் மூன்று நான்கு ஆண்டுகளாக நான் சிறப்பாக செயல்படவில்லை. விஷயங்கள் ஒழுங்காக நடக்காத பொழுது மீண்டும் துவங்கிய இடத்திற்கு வருகிறோம். நான் கடினமாக பயிற்சியில் ஈடுபட்டேன். நான் இது போன்ற விஷயங்களுக்கு பயிற்சி செய்தேன். என் அப்பா என்னுடைய சம்பந்தப்பட்ட விஷயங்களை வீட்டிலிருந்து பார்க்க விரும்புகிறார். அவர் அங்கிருந்து நான் செய்யக் கூடியதை எல்லாம் அனலைஸ் செய்கிறார். இதன் காரணமாக என் அம்மா என் உடன் இருக்கிறார். எனக்கு இது உதவியாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.