பாஸ்பாலுக்கு மாஸ் காட்டிய ரோகித்-கில் அதிரடி சதம்.. 46 ரன் முன்னிலை.. 9 விக்கெட் கைவசம்

0
450
Rohit

மார்ச் 8. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தரம்சாலா மைதானத்தில் ஐந்தாவது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிக்கான டார்சில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி குல்தீப் பந்துவீச்சில் சுருண்டு 218 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் தரப்பில் குல்தீப் 5, அஸ்வின் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

நேற்று தனது முதல் இன்னிங்ஸ் முதல் நாளில் விளையாடிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மா 52 சுப்மன் கில் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்கள்.

இன்று இருவரும் தொடர்ந்து விளையாட களம் வந்தார்கள். முதல் இரண்டு ஓவர்கள் பொறுமை காட்டிய இந்த ஜோடி அதற்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் போல அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எப்படியான களவியூகம் அமைப்பது என தெரியாமல் இந்த ஜோடியிடம் தடுமாறி நின்றார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மேலும் முன்னேறியது. இந்த பார்ட்னர்ஷிப்பில் அதிரடியாக விளையாடிய இளம் வீரர்கள் தனது அரை சதத்தை அடித்தார்.

- Advertisement -

மேலும் அதிரடியாக விளையாடிய இந்த ஜோடியில் ரோகித் சர்மா முதலில் சதம் அடித்தார். இது அவருக்கு இங்கிலாந்துக்கு எதிராக நான்காவது டெஸ்ட் சதம். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு 12வது சதம்.

ரோகித் சர்மா சதம் அடித்தவுடன் அடுத்த ஓவரிலேயே சுப்பன் கில் 138 பந்துகளில் அதிரடியாக தனது நான்காவது சர்வதேச சதத்தை அடித்தார். சமீபமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல பேட்டிங் ஃபார்மில் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இருந்து எல்லாம் மாறி இருக்கிறது.

இன்று முதல் செசன் முழுவதும் விக்கெட் விடாமல் இந்த ஜோடி சிறப்பாக விளையாடி முடித்திருக்கிறது. ரோஹித் சர்மா 160 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 102, சுப்மன் கில் 142 பந்துகளில் 10 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார்கள். இந்த ஜோடி மொத்தம் 160 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது.

இதையும் படிங்க : இங்கிலாந்தை வச்சு ஐபிஎல்-க்கு பிராக்டிஸ் பண்ணும் ரோகித்-கில்.. ஆண்டர்சனுக்கு ஸ்பெஷல் ட்ரீட்

தற்போது இந்திய அணி ஒரு விக்கெட் இழந்து 264 ரன்கள் எடுத்திருக்கிறது. இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 46 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இன்றைய நாளின் முதல் செசனில் மட்டும் இந்திய அணி அதிரடியாக 129 ரன்கள் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.