இங்கிலாந்தை வச்சு ஐபிஎல்-க்கு பிராக்டிஸ் பண்ணும் ரோகித்-கில்.. ஆண்டர்சனுக்கு ஸ்பெஷல் ட்ரீட்

0
378
Rohit

மார்ச் 8. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று தரம்சாலா மைதானத்தில் துவங்கிய ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

மிகச் சிறப்பாக துவங்கிய இங்கிலாந்து அணி அதற்கு பிறகு மோசமாக விளையாடி 218 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இந்திய அணியின் தரப்பில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து நேற்று தனது முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார்கள். இந்த துவக்க ஜோடி மொத்தம் 104 பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இந்த போட்டியிலும் சதம் அடித்து பல சாதனைகள் படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் அதிரடியாக 58 பந்தில் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இதற்கு அடுத்து ரோகித் சர்மாவுடன் சுப்மன் கில் விளையாட வந்தார்.

நேற்று இந்த ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. ரோகித் சர்மா 52 ரன்கள், சுப்மன் கில் 26 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்கள். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் மட்டும் இழந்து 135 ரன்கள் எடுத்து 83 ரன்கள் பின்தங்கி இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த ஜோடி இன்று மீண்டும் இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணிக்கு துவங்கியது. முதல் இரண்டு ஓவர்களை பஷீர் மற்றும் ஆண்டர்சன் வீச இந்த ஜோடி மெதுவாக விளையாடியது.

இதற்குப் பிறகு மூன்றாவது ஓவரை பஷீர் வீச, முதல் பந்தையே சிக்சர் அடித்த ரோஹித் சர்மா, அடுத்த பந்தை பவுண்டரிக்கு பறக்க விட்டார். இதற்கு அடுத்து ஆண்டர்சன் வீசிய ஓவரில், சுப்மன் கில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கிரீசில் இருந்து இறங்கி வந்து நேராக சிக்சர் அடித்து ஆச்சரியப்படுத்தினார். அடுத்த பந்தையே பவுண்டரிக்கு அடித்தார்.

இதையும் படிங்க : நாங்க மோசமா விளையாடல.. குல்தீப்தான் செமையா பவுலிங் பண்றார்.. என்ன பண்ண?” – கிரேம் ஸ்வான் பேட்டி

அடுத்து இங்கிலாந்து கேப்டன் மார்க் வுட்டை கொண்டுவர அவரது ஓவரிலும் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் சுப்மன் கில் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 64 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் அரைசதம் அடித்தார். தற்பொழுது இந்த ஜோடி 80 ரன்கள் ஆட்டம் இழக்காமல் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது.