மதியம் 2 மணி to நைட் 12.45 வரைக்கும் ப்ராக்டிஸ்.. அவனுக்கு கிரிக்கெட்தான் சோறு – ராபின் உத்தப்பா பேட்டி

0
151

நடக்க இருக்கும் 17ஆவது ஐபிஎல் சீசனில் சில இந்திய இளம் வீரர்கள் குறித்து நிறைய பார்வை இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜுரல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்ராஜ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரஜத் பட்டிதார் ஆகியோர் கவனிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள்.

ஐபிஎல் தொடருக்கு அடுத்து ஜூன் மாதம் ஐந்தாம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கின்ற காரணத்தினால், இளம் வீரர்களுக்கு இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தனிப்பட்ட ஒரு அழுத்தத்தையும் நெருக்கடியையும் உருவாக்கி இருக்கிறது. எனவே இவர்கள் இதைத் தாண்டி இந்த ஐபிஎல் சீசனில் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.

- Advertisement -

தற்போது டி20 உலகக் கோப்பை இந்திய அணியின் கேப்டனாக துவக்க இடத்தில் ரோகித் சர்மா இருப்பார். இன்னொரு துவக்க வீரராக வருவதற்கு ஜெய்ஸ்வால், கில் மற்றும் ருதுராஜ் என மூன்று வீரர்கள் இடையே போட்டி இருக்கிறது. மேலும் இந்த மூவரில் இருந்து இருவர் தேர்வாக வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக போட்டிகள் மிக அதிகமாக இருக்கும்.

இதேபோல் டி20 உலகக் கோப்பை இந்திய அணியின் விக்கெட் கீப்பர்கள் யார் என்பது முடிவாகவில்லை. நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் துருவ் ஜுரல் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தால். பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜிதேஸ் சர்மா இருக்கிறார். மேலும் ரிஷப் பண்ட் திரும்பி வர சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் ஒரு பக்கத்தில் இருக்கிறார்கள். எனவே இதற்கும் போட்டி மிக அதிகமாக இருந்து வருகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் பொழுது ” 2020 ஆம் ஆண்டு ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குள் வந்த பொழுது, நான் அந்த அணியில் விளையாடியதால் அவரை நான் மிக நெருக்கத்தில் பார்த்தேன். அவர் கிரிக்கெட் பற்றி மட்டுமே யோசிக்க கூடியவர். கிரிக்கெட்டை சுவாசித்து அதையே சாப்பிட்டு உயிர் வாழக் கூடியவர். அவர் நம்மை தாண்டி செல்லும் பொழுது ஏதாவது கிரிக்கெட் குறித்து தனக்குள்ளேயே பேசிக்கொண்டே விடை கண்டுபிடிப்பார்.

- Advertisement -

அவர் கிரிக்கெட் மீது எவ்வளவு வெறி கொண்டவர் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அகாடமியில் மதியம் 2 மணிக்கு பேட்டிங் பயிற்சிக்கு சென்றவர், இரவு 12.45 வரை விடாமல் தொடர்ந்து பேட்டிங் பயிற்சி செய்து கொண்டிருந்தார். அவருக்கு கிரிக்கெட் தவிர வேறு எதுவுமே தெரியாது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024: கவனிக்கப்பட வேண்டிய 7 நட்சத்திர அறிமுக வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்ராஜ் மூன்று வடிவ கிரிக்கெட் விளையாடுவதற்கு தகுதியானவர். அவருக்கு இருக்கும் திறமைக்கு ஏற்கனவே இந்திய அணிக்கு விளையாடி இருக்க வேண்டும். ஆனால் போட்டி அதிகம் இருக்கின்றது.எனவே அவர் எதிர்காலத்தில் விளையாடுவார். துருவ் ஜுரல் விக்கெட் கீப்பராக மிகவும் கவனிக்க வைக்கிறார். பினிஷிங் ரோலை எடுத்து அவர் மிகச் சிறப்பாக செய்வார்” என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.