ஐபிஎல் 2024: கவனிக்கப்பட வேண்டிய 7 நட்சத்திர அறிமுக வீரர்கள்

0
4630

ஐபிஎல் தொடர் வருகிற 22ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. இதில் இந்தியாவில் மட்டுமல்லாமல் பல உலக நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விளையாடி தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடினால், சர்வதேச அணியிலும் அவர்களுக்கான இடம் எளிதாகக் கிடைத்து விடுகிறது.

இப்படி இந்தத் தொடரில் கலந்து கொண்டு சர்வதேச அணியில் இடம் பிடித்து விளையாடியவர்கள் ஏராளம். இந்நிலையில் 2024 சீசனில் கவனிக்கப்படக்கூடிய ஏழு முக்கிய வீரர்கள் களமிறங்க உள்ளனர். அவர்களைப் பற்றி காண்போம்.

- Advertisement -

கவனிக்கப்பட வேண்டிய அறிமுக வீரர்கள்

1.ரச்சின் ரவீந்திரா: இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் இந்த இந்திய வம்சாவளி வீரர். இவரது திறமையைக் கண்ட சென்னை அணி உடனடியாக இவரை வாங்கியது. பேட்டிங் மட்டுமல்லாமல் முக்கிய நேரங்களில் பந்தும் வீசக்கூடிய திறமையான பவுலர். எனவே இவரை எம்எஸ் தோனி தலைமையின் கீழ் சென்னை ஜெர்சியில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

2.சமர் ஜோசப்: வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் சமர் ஜோசப் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆறு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற வைத்தவர். எனவே இவரை லக்னோ அணி காயம் அடைந்த வீரர் ஒருவருக்கு பதிலாக சமீபத்தில் வாங்கியது. எனவே இவரின் அதிவேக பந்துவீச்சை ஐபிஎல் தொடரிலும் காணலாம்.

3.ஜெரால்டு கோட்சி: கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியில் ஒரு மாற்று வீரராக இருந்த இவர், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய அதிவேக பந்துவீச்சாளர் ஆன இவர் கடந்த உலகக்கோப்பை தொடரில சிறப்பாக செயல்பட்டு எட்டு போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் வேகத்தில் மட்டுமல்லாமல் பந்தை துல்லியமாக யார்க்கர்கள் வீசுவதிலும் வல்லவர். எனவே இவரை இனி மும்பை அணியில் காணலாம்.

- Advertisement -

4.நுவான் துஷாரா: துஷாரா சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்ததன் மூலம் அனைவருக்கும் கவனத்தையும் பெற்றார். இவர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரில் MI கேப்டவுன் அணிக்காக பங்கு பெற்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை எடுக்க எளிதாக இருந்தது. இவர் மற்ற லீக் தொடர்களான எல்பிஎல் மற்றும் பிஎஸ்எல் தொடர்களில் விளையாடியுள்ளார். லசித் மலிங்காவின் ஆக்சனை பின்பற்றக்கூடிய இவரின் பந்துவீச்சை வரும் தொடர்களில் காணலாம்.

5.அஸ்மத்துல்லா ஓமர்சாய்: ஆப்கானிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டரான 23 வயது ஓமர்சாய் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக களம் இறங்குகிறார். இவரால் பவர் பிளேவில் புதிய பந்தை எளிதாக ஸ்விங் செய்ய முடியும். ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம் சச்சின் டெண்டுல்கரால் வெகுவாக ஈர்க்கப்பட்டார். மேலும் சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 149 ரன்கள் குவித்தார். எனவே இவர் குஜராத் அணிக்கு சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.

6.நந்த்ரே பர்கர்: தென்னாபிரிக்க அணியைச் சேர்ந்த 28 வயதான பர்கர் சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஐம்பது லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். இவர் பந்தினை ஸ்விங் செய்வது மட்டுமல்லாமல் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடியவர். எனவே இவரது பங்களிப்பு ராஜஸ்தான் அணிக்கு முக்கிய தேவையாக இருக்கலாம்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024: 10 அணிகளின் கேப்டன்கள் மற்றும் அவர்களின் சம்பளம்

7.தில்சன் மதுஷங்கா: இலங்கை அணியைச் சேர்ந்த 23 வயதான இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர். இவரது ஆரம்ப விலை 50 லட்சமாக இருந்து 4.60 கோடி ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியுள்ளது. சர்வதேச அணிக்காக 14 டி20 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். எனவே இவரது தேர்வு மும்பை அணிக்கு சிறப்பானதாக இருக்கும்.