வீல் சேர்ல இருந்தா கூட தோனி சிஎஸ்கேவுக்கு விளையாடுவார்.. அவர் பிரச்சனையே வேற – ராபின் உத்தப்பா பேச்சு

0
246
Dhoni

மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் மிக முக்கியமானவராக இருப்பதற்கு, ஒரு பேட்ஸ்மேனாக ஃபினிஷர் ஆகவும், விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் இருப்பதால் மட்டுமே கிடையாது. அவரின் மதிப்பு கூடுவதற்கு வெளியில் மிக முக்கியமான காரணங்கள் நிறைய இருக்கின்றன.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்று ஒரு தனி அருமையான கலாச்சாரம் இருக்கிறது. அந்த அணியின் உரிமையாளர்கள் அணியின் முடிவுகளில் எந்தவிதமான தலையீட்டையும் செய்ய மாட்டார்கள். களத்திற்குள் என்ன நடந்தாலும் அதை களத்திற்கு வெளியில் கொண்டு வர அனுமதிக்க மாட்டார்கள்.

- Advertisement -

மேலும் அனைத்து வீரர்களுக்கும் ஒரே மாதிரி அணியில் மதிப்பு கொடுக்கப்படும். வீரர்களின் குடும்பம் ஐபிஎல் தொடர் முழுவதும் அவர்களோடு சேர்ந்து பயணிப்பதற்கு எல்லா விதமான வசதிகளும் செய்து கொடுக்கப்படும். வீரர்கள் யாருக்காவது வாய்ப்புக் கொடுத்தால் அந்த வாய்ப்பு குறைந்தது ஐந்து போட்டிகளுக்காவது கொடுக்கப்படும். ஒரு வீரர் வாய்ப்பு இல்லாமல் வெளியில் இருக்கிறார் என்றால், எதனால் அவர் இருக்கிறார்? அவருக்கான வாய்ப்புகள் என்ன என்பது குறித்து முன்கூட்டியே தெளிவாகச் சொல்லப்படும்.

இதற்கு அடுத்து ஐபிஎல் மாதிரியான வணிக ரீதியான ஒரு கிரிக்கெட் தொடரில், வெற்றிகரமாக ஒரு அணியை எப்படி வைத்திருக்க வேண்டும்? அதற்கு எப்படியான அணியைத் தேர்வு செய்ய வேண்டும்? பிறகு அந்த அணியை எப்படி வழிநடத்திச் செல்ல வேண்டும்? என மேற்கண்ட அத்தனை விஷயங்களிலும் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் பங்களிப்பு இருக்கிறது. ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கான எக்காலத்திற்கும் பொருந்தும் அருமையான வெற்றிகரமான கலாச்சாரத்தையே உருவாக்கிய கேப்டனாக மகேந்திர சிங் தோனி மட்டும்தான் இருப்பார்.

இப்படியான காரணங்களால்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலே மகேந்திர சிங் தோனி என்று சொல்லப்படுகிறது. நாளை அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் கூட, அவர் உருவாக்கிய பழக்கவழக்கங்களும் மற்றும் அணிக்கான வழிநடத்தல் நடைமுறைகளும் அப்படியே தொடரும்.

- Advertisement -

இந்த நிலையில் நடக்க இருக்கின்ற ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனியின் பிரச்சனை எதுவாக இருக்கும் என்று பேசி உள்ள ராபின் உத்தப்பா கூறும் பொழுது “அவர் வீல்சேரில் வந்தால் கூட சிஎஸ்கே நிர்வாகம் அவரை விளையாட அனுமதிக்கும். அவர் வந்து பேட்டிங் செய்து விட்டு திரும்ப செல்லலாம். அவரை யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். அவருக்கு பேட்டில் ஒரு பிரச்சினையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

இதையும் படிங்க : அந்த பையன பாக்கனும்.. தோனி ஆர்டர்.. இன்னொரு குட்டி மலிங்காவை தூக்கி வந்த சிஎஸ்கே

ஆனால் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்த திரும்பி இருக்கும் அவருக்கு விக்கெட் கீப்பிங் செய்வது பிரச்சனை என்று நான் நினைக்கிறேன். அவருக்கு விக்கெட் கீப்பராக ஸ்டெம்புக்கு பின்னால் இருந்து, போட்டியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. ஒருவேளை அவர் விக்கெட் கீப்பராக செயல்படுவதில் பிரச்சனை வந்தால், அதுதான் அவர் ஐபிஎல் தொடரை விட்டு வெளியே செல்வதற்கு காரணமாக இருக்கும். மற்ற எந்த விஷயங்களும் அவரை பாதிக்காது” என்று கூறியிருக்கிறார்