அந்த பையன பாக்கனும்.. தோனி ஆர்டர்.. இன்னொரு குட்டி மலிங்காவை தூக்கி வந்த சிஎஸ்கே

0
2145
Dhoni

2024 17 வது ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு இன்னும் எட்டு நாட்கள் இருக்கின்ற நிலையில், தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் மும்முரமான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. இறுதியாக தங்கள் அணியில் காயமடைந்துள்ள வீரர்களுக்கு மாற்று வீரர்களை தேடிக் கொண்டு வந்து முழு பலத்தை பெருக்குவதற்கு முனைப்பு காட்டிக் கொண்டிருக்கின்றன.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில், எல்லா வகையிலும் அந்த அணி மிகவும் வலிமையாக காணப்படுகிறது. அவர்களின் பெஞ்ச் வலிமையை எடுத்துக் கொண்டால், சிறப்பாக விளையாடக்கூடிய, மற்ற அணிகளுக்கு தேவையான அளவுக்கான வீரர்களுக்கு விளையாடும் வாய்ப்பை கொடுக்க முடியாத அளவுக்கு இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு சிறிய பின்னடைவாக, இந்திய ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடக்கூடிய வெளிநாட்டு பேட்ஸ்மேனான நியூசிலாந்து நாட்டின் துவக்க ஆட்டக்காரர் கான்வே காயமடைந்திருக்கிறார். இவரால் 8 வாரங்கள் விளையாட முடியாது எனக் கூறப்பட்டிருக்கிறது. இதனால் ஏறக்குறைய ஐபிஎல் தொடரின் இறுதிப் பகுதிக்கு தான் இவர் கிடைப்பார். ஆனாலும் இவருடைய இடத்திற்கு இவரது நாட்டைச் சேர்ந்த இன்னொரு இடதுகை துவக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தராவை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் சமாளித்து விடும்.

அதே சமயத்தில் இலங்கையிலிருந்து கிடைத்த மலிங்கா போன்று பந்து வீசக்கூடிய பதிரனா தற்பொழுது பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் காயமடைந்து அணிக்கு வெளியே இருக்கிறார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அவர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில மலிங்கா மற்றும் பதிரனா போலவே பந்து வீசும், 17 வயதான இலங்கையைச் சேர்ந்த குகதாஸ் மாத்துலன் என்னும் இளம் வீரரை மகேந்திர சிங் தோனி பார்க்க விரும்பியதால், தற்போது அவர் சிஎஸ்கே அணி உடன் வந்து இணைந்திருக்கிறார். ஏற்கனவே இவர் சிஎஸ்கே அணியின் வலைப் பயிற்சியில் இருந்தவர்.

- Advertisement -

இப்போதைக்கு இவர் சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் முக்கிய ஆட்களின் கண்காணிப்புக்குள் இருந்து வருகிறார். ஒருவேளை பதிரனா காயம் சரியாகாமல் விளையாட முடியாத நிலை வந்தால், அவருடைய இடத்திற்கு தற்காலிகமாக அவரைப் போலவே பந்து வீசும் இந்த இளம் வீரர் விளையாட வைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க : “கடைசில ரகானே எனக்கு அப்படி செய்வார்னு நினைக்கவே இல்ல” – ஓய்வு பெற்ற குல்கர்னி நெகிழ்ச்சியான பேட்டி

2022 ஆம் ஆண்டு முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களை இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சீசனை பெற்றது. ஆனால் இந்த முறை ஒவ்வொரு வீரருக்கும் சரியான மாற்று வீரர்களை முன்கூட்டியே யோசித்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.