பவுலர்கள் 10 விக்கெட்.. வெறும் 16 ரன் எடுத்த ரிஷப் பண்ட்டுக்கு ஆட்டநாயகன் விருது.. காரணம் என்ன.?

0
59

நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 தொடரின் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 16 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டிருப்பது ரசிகர்களுடைய சற்று விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

டாஸ் வென்று முதலில் பந்து வீசிய டெல்லி அணியினர் 17.3 ஓவர்களில் குஜராத் அணியை 89 ரன்களுக்கு டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் சுருட்டினர். இஷாந்த் சர்மா எட்டு ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளும், முகேஷ் குமார் 14 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளும், ஸ்டெப்ஸ் 11 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

பின்னர் மிகக் குறைந்த இலக்கை விரட்டிய டெல்லி அணி எட்டு ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 11 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 16 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார்.

மிகக்குறைந்த இலக்கில் குஜராத் அணியை சுருட்டிய டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களில் ஒருவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுப்பதற்கு பதிலாக 16 ரன்கள் குவித்த ரிஷப் பன்டிற்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது சிறிது சர்ச்சையை கிளப்பியது.

ஆனால் ரிஷப் பண்ட் பதினாறு ரன்கள் குவித்து டெல்லி அணியை வெற்றி வெற்றி பெற வைத்தது மட்டும் இல்லாமல், விக்கெட் கீப்பிங் இரண்டு கேட்ச்களும், இரண்டு ஸ்டம்பிங்கும் செய்து குஜராத் அணி குறைந்த ரன்களில் சுருள முக்கிய காரணமாக அமைந்தார். குஜராத் அணியின் முக்கிய பேட்ஸ்மேன் டேவிட் மில்லரை இரண்டு ரன்களில் கேட்ச் மூலம் வெளியேற்றினார்.

- Advertisement -

அதற்குப் பின்னர் அபினவ் மனோகரை ஸ்டம்பிங் முறையில் வெளியேற்றிய பண்ட், அதற்குப் பிறகு ஷாருக்கான் ஸ்டம்பிங் முறையில் வெளியேற்றினார். அதற்குப் பிறகு குஜராத் அணிக்காக 31 ரன்கள் குவித்து சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டு இருந்த ரசித் கானையும் கேட்ச் முறையில் வெளியேற்றினார்.

இதையும் படிங்க:சிவம் துபே டி20 உ.கோ இந்திய அணியில் செலக்ட்டாக.. இந்த ஒரே பிரச்சனை மட்டும்தான் இருக்கு – ஏபி.டிவில்லியர்ஸ் கருத்து

பதினாறு ரன்கள் மற்றும் நான்கு பேரை ஆட்டமிழக்கச் செய்ததன் விளைவாக, அணியின் கேப்டன் ரிஷப் பன்ட்டிற்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 9வது இடத்தில் இருந்த டெல்லி அணி மூன்று இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்திற்கு சென்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது. டெல்லி அணி வருகிற சனிக்கிழமை வலுவான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை டெல்லியின் அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொள்கிறது.