நடைபெற்றுக் கொண்டிருக்கும் 17 வது ஐபிஎல் சீசனில் இருக்கும் சுவாரசியத்தை விட, ஐபிஎல் தொடருக்குப் பிறகு நடக்க இருக்கும் டி20 உலக கோப்பைக்கு எப்படியான இந்திய அணி அமையும்? என்பதுதான் பெரிய சுவாரசியமாக இருந்து வருகிறது. டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் சிவம் துபே இடம்பெறுவாரா? என்பது குறித்து ஏபி.டிவிலியர்ஸ் தன்னுடைய கருத்தை கூறி இருக்கிறார்.
தற்பொழுது சிவம் துபே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 163 ஸ்ட்ரைக் ரேட்டில் 242 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரது சிக்ஸ் ஹிட்டிங் எபிலிட்டி எதிரணி பந்துவீச்சாளர்கள் மற்றும் கேப்டன்களை பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது.
இவர் பேட்டிங் செய்ய வருகையில் இவருக்காகவே வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டு வந்து சுழல் பந்துவீச்சாளர்களை ஒதுக்கி வைக்கிறார்கள். இதன் காரணமாக கடைசி கட்டத்தில் சுழல் பந்து வீச்சாளர்கள் பந்து வீச வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இது அந்த நேரத்தில் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு உதவியாக அமைகிறது. இல்லையென்றால் பகுதி நேர வேகப்பந்துவீச்சாளர்கள் பந்து வீச வேண்டியதாகவும் அமைந்துவிடுகிறது.
ஒட்டுமொத்தமாக மிடில் வரிசையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சிவம் துபே டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவது பற்றி பேசி இருக்கும் ஏபி.டிவில்லியர்ஸ் கூறும் பொழுது “அற்புதமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திடீரென இரண்டு போட்டிகளுக்கு பிறகு தடுமாறி இரண்டு போட்டிகளை தோற்றது. ஆனால் அவர்கள் மீண்டும் திரும்பி வந்து பிளே ஆப் சுற்றுக்கான பாதையில் இருக்கிறார்கள்.
டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் சிவம் துபே தேர்வு செய்யப்படலாம். அவருக்கு ஒரு அற்புதமான சீசன் இருந்து வருகிறது. இதில் அவர் தேர்வாவதில் இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால், அவருடைய இடத்தில் விளையாடுவதற்கு நிறைய வீரர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டும்தான். ஆனால் அவர் திறமையான பேட்ஸ்மேன் மற்றும் பந்தை நன்றாக அடிக்கும் ஸ்ட்ரைக்கர்.
இதையும் படிங்க : டி20 உ.கோ இந்திய அணியில் தோனி இடம்பெறுகிறாரா? – கேப்டன் ரோஹித் சர்மா சுவாரசியமான பதில்
ஆர்சிபி அணியை விட்டு வெளியேறியதில் இருந்து அவர் மிகவும் மேம்பட்டு இருக்கிறார். சிஎஸ்கே அணியில் தன் வாழ்க்கையில் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுகிறார். அங்கு அவர் ஏதோ ஒன்றை கண்டுபிடித்ததாக தெரிகிறது. அது அவரை சுதந்திரமாக விளையாட அனுமதித்திருக்கிறது. அவர்ஆட்டத்தின் சூழ்நிலை எப்படி என்று பார்க்காமல், பந்தை பார்த்து விளையாட ஆரம்பித்து விட்டார். இதனால் அவர் சில போட்டிகளில் நாட் அவுட் ஆகவும், மேலும் சில அரைசதங்களையும் பெற்று இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்