தோனி கிடையாது.. இவருக்காகவே கிரிக்கெட் பார்த்தேன்.. இவரால்தான் கிரிக்கெட்டராகவே ஆனேன் – ரிஷப் பண்ட் பேட்டி

0
167
Dhoni

இந்திய கிரிக்கெட்டின் மிக வெற்றிகரமான கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான மகேந்திர சிங் தோனியின் இடத்துக்கு, இடதுகை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அவருடைய இருபதாவது வயதில் 2018 ஆம் ஆண்டு இந்திய டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான.

மிகப்பெரிய வீரரான மகேந்திர சிங் தோனியின் இடத்திற்கு மாற்று வீரராக வந்த காரணத்தினால், இளம் வயதிலேயே அவர் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் இருந்தது. இதன் காரணமாக அவர் அந்த அழுத்தத்தை தாங்க முடியவில்லை. இதனால் அவரது இயல்பான பேட்டிங் திறமை பாதிக்கப்பட்டதோடு, அவரது விக்கெட் கீப்பிங் திறமையும் பாதிக்கப்பட்டது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் பலருக்கும் பிடித்திருந்த வீரராக இருந்த ரிஷப் பண்ட், இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஒரு சில மாதங்களிலேயே, பல இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கேலி செய்யப்படும் வீரராக மாறினார். இது தனிப்பட்ட முறையில் அவரை மிகவும் பாதித்ததாகவும், ஹோட்டல் அறையில் தனியாக அழுததாகவும் பின் நாட்களில் அவர் கூறியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரையில் மகேந்திர சிங் தோனி தான் முதன்முதலில் வெற்றிகரமான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இருந்தவர். இன்றும் கூட அவரது இடத்தை யாரும் சரியாக நிரப்பி விடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு அடுத்தபடியாக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக மிகச் சிறப்பாக செயல்பட்டவர் ரிஷப் பண்ட் மட்டுமே.

அதிரடியான டி20 கிரிக்கெட்டுக்கான பேட்டிங் அணுகுமுறையை கொண்ட அவரால், வெள்ளைப் பந்து கிரிக்கெட் வடிவங்களில் ஜொலிக்க முடியவில்லை. அதே சமயத்தில் அதற்கு நேர் எதிரான சிவப்பு பந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான புள்ளி விபரங்களை வைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவதின் மூலம் போட்டியில் பெரிய தாக்கத்தை உண்டாக்க முடியும் என நிரூபித்த வீரர்களில் இவரும் ஒருவர்.

- Advertisement -

தோனியின் இடத்திற்கு மாற்று வீரராக வந்த இவரை, அடுத்த தோனி என பலரும் கூறினார்கள். இப்படியான நிலையில் தன்னுடைய இன்ஸ்பிரேஷன் ஆக மற்றும் ஐடியல் வீரராக ரிஷப் பண்ட் ஆடம் கில்கிறிஸ்டை கூறிய ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். உலக கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கட்டாயம் பேட்டிங் செய்தாக வேண்டும் என்கின்ற சூழ்நிலையை உருவாக்கியவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பிசிசிஐ மாதிரி இந்த விஷயத்துல கனவுல கூட பாகிஸ்தானால் வர முடியாது – வாசிம் அக்ரம் வருத்தம்

இது குறித்து ரிஷப் பண்ட் கூறும்போது “அவர் எவ்வளவு சிறந்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அவர் எனக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தார் என்று நான் நினைக்கிறேன். கிரிக்கெட்டை அதிகம் பார்க்க பிடிக்காத நான், அவர் களத்தில் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் அதிரடியாக செயல்படும் முறையின் காரணமாக ஈர்க்கப்பட்டேன். இதனால் நான் அதிகமாக அவருக்காக கிரிக்கெட் பார்த்தேன். அவரைப் பற்றிய அனைத்தையும் நான் விரும்பினேன். முதன் முதலில் அவரை ஆஸ்திரேலியாவில் சந்தித்தது ஆச்சரியமான ஒன்றாக இருந்தது” எனக் கூறியிருக்கிறார்.