நிதிஷ் ரெட்டி என்னோட ஃபேவரைட்டா மாறிட்டு வரார்.. நேத்து அவர் செஞ்ச இந்த காரியம் அபூர்வம் – ஷேன் வாட்சன் பாராட்டு

0
55
Watson

ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி மிகவும் பரபரப்பான ஒன்றாக அமைந்தது. ஹைதராபாத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்த போட்டியில், ஹைதராபாத் அணியின் நிதிஷ்குமார் ரெட்டி பேட்டிங்கில் மிகச் சிறப்பாக விளையாடி இருந்தார். அவர் குறித்து பாராட்டி ஷேன் வாட்சன் பேசியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் பவர் பிளேவில் மிகவும் தடுமாறிய ஹைதராபாத் அணி 35 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதற்குப் பிறகு டிராவீஸ் ஹெட் உடன் ஜோடி சேர்ந்த இளம் வீரர் நிதிஷ் ரெட்டி, ஹெட்டை விட அதிரடியாக, தரம் வாய்ந்த அஸ்வின் மற்றும் சாகல் இருவரையும் விளையாடிய ரன் அழுத்தத்தை குறைத்தார். இந்த ஜோடியை 57 பந்துகளுக்கு 96 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து மீண்டும் அதிரடி வீரர் கிளாசன் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 பந்துகளில் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் வருவதற்கு காரணமாக இருந்தார். நேற்றைய ஆட்டத்தில் மொத்தமாக 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடித்தவர், அதிரடி தாக்குதலில் 8 சிக்ஸர்கள் நொறுக்கி தள்ளி 76 ரன்கள் ஆட்டம் இழக்காமல் குவித்தார்.

அவருடைய ஆட்டம் மிகத் தெளிவாக 160 முதல் 180 ரன்கள் எடுப்பதால் எந்த பயனும் இல்லை என்பது போல் இருந்தது. எனவே உலகின் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை விளையாடி காட்டினார். அவருடைய ஆட்டம் தான் ஹைதராபாத் அணி 201 ரன்கள் எடுப்பதற்கு முக்கிய காரணமாகவும், போட்டியை வெல்வதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.

- Advertisement -

நிதீஷ் குமார் ரெட்டி குறித்து ஷேன் வாட்சன் பேசும் பொழுது “நிச்சயம் பார்க்க வேண்டிய மற்றும் எனக்கு பிடித்த வீரர்களில் ஒருவராக நிதீஷ் குமார் ரெட்டி மாறி வருகிறார். ஒரு இளைஞன் குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சாகல் போன்ற மிகச் சிறந்த சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடிய சில ஷார்ட்கள் எல்லாம் அபூர்வ திறமையானவை. மேலும் மிகவும் நெருக்கடியான ஒரு நேரத்தில் இப்படியான உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடிய அவருடைய திறமை மிகவும் அரிய ஒன்று.

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் நடராஜனுக்கு எதிரா.. இதத்தான் பிளான் பண்ணினார்.. நாங்க தப்பு பண்ணிட்டோம் – ரியான் பராக் பேச்சு

அவர் மிகவும் சிறப்பான திறமைசாலி. எனவே ஐபிஎல் தொடரிலிருந்து வழக்கமாக இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு ஜோடி அதி திறமையான இளம் வீரர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இதனால்தான் இந்திய கிரிக்கெட்டில் ஏராளமான திறமைகள் இருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட்டில் திறமைகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் அதில் நிதிஷ்குமார் ரெட்டியின் தற்பொழுது ஒருவர்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -