எனக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்காம இருக்குறதுக்கும்.. பீல்டிங் வெளியில இருக்கிறதுக்கும் இதான் காரணம் – ரிங்கு சிங் பேட்டி

0
485
Rinku

நடப்பு 17 வது ஐபிஎல் சீசன் மே மாதம் 26 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 5ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. உலக கோப்பையில் பங்குபெறும் அணிகள் தங்களுடைய அணியை மே ஒன்றாம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதை ஒட்டி ரிங்கு சிங் சில முக்கிய விஷயங்களுக்கு விளக்கம் அளித்து இருக்கிறார்.

இதற்கான இந்திய அணி அறிவிப்பு ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு இருக்கும் ரிங்கு சிங் ஐபிஎல் தொடரில் பெரிதாக பேட்டிங் செய்ய வாய்ப்பு இல்லாமல் இருப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது.

- Advertisement -

குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பினிஷராக ரிங்கு சிங் பெரிய அளவில் கவனம் ஈர்த்து, இந்திய டி20 அணியிலும் இடம் பிடித்தார். இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் பினிஷர் ஆக ரிங்கு சிங் இடம்பெறுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

உலகக் கோப்பை நெருங்கி இருக்கும் இந்த நேரத்தில் ரிங்கு சிங் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பேட்டிங்கில் விளையாடுவதற்கு பெரிய வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். அவரை நான்காவது இடத்தில் களம் இறங்கி விளையாட வைக்கலாம். ஆனால் தொடர்ந்து அந்த இடத்தை ஸ்ரேயாஸ் ஐயருக்கு கொடுத்து வருகிறார்கள். மேலும் அவர் கடந்த போட்டியில் ஃபீல்டராக களத்திற்கும் வரவில்லை. இதுவெல்லாம் தற்பொழுது கவலை அளிக்கக்கூடிய விஷயமாக இருந்து வருகிறது.

இது குறித்து விளக்கம் தெரிவித்துள்ள ரிங்கு சிங் பேசும்பொழுது “கடந்த முறை நான் 5 சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்தேன். அன்று என்னுடைய நாளாக இருந்தது. ஆனால் தற்பொழுது எனக்கு இந்த சீசனில் விளையாடுவதற்கு பேட்டிங்கில் வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அருமையாக விளையாடுகிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : பந்து தயாரிக்கிற கம்பெனியை மாத்துங்க.. இவங்கள கொண்டு வாங்க ஐபிஎல் செம்மையா இருக்கும் – கம்பீர் யோசனை

உதாரணமாக சுனில் நரைன் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அதே சமயத்தில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும்போது நான் அதில் கோல் அடிப்பேன். எனக்கு சிறிய அளவில் காயம் இருக்கிறது. இதன் காரணமாகவே நான் பீல்டிங் செய்ய வரவில்லை. அடுத்து 21 ஆம் தேதி நடக்க இருக்கும் போட்டியில் நான் நிச்சயம் பீல்டிங் செய்ய களம் இறங்குவேன்” எனக் கூறியிருக்கிறார்.