பயிற்சியில் சிறுவனிடம் மன்னிப்பு கேட்ட ரிங்கு சிங்.. வைரல் ஆகும் வீடியோ.. என்ன நடந்தது

0
58
Rinku

கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் நிறைய இளம் வீரர்கள் உள்ளே வந்தார்கள். இதில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் ரிங்கு சிங் முக்கியமானவர்.

பேட்டிங் வரிசையில் பினிஷிங் இடத்தில் களம் இறங்கும் இவர் காட்டும் நிதானம் மற்றும் அதிரடி மகேந்திர சிங் தோனியை ஞாபகப்படுத்துகிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் மகேந்திர சிங் தோனியை விட நிறைய ஷாட் வைத்திருக்கக் கூடியவராக இருக்கிறார்.

- Advertisement -

அயர்லாந்து, ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் என இவர் விளையாடி இருக்கும் டி20 தொடர்களில் தன் தாக்கம் மிகுந்த ஆட்டத்தால் தனி முத்திரையை பதித்திருக்கிறார். எனவே இவருக்கு இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் இடம் இருக்கிறது என்பது உறுதியாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடி 59 ஆவரேஜ் 149 ஸ்டிரைக் ரேட் உடன் 474 ரன்கள் குவித்தார். பினிசர் ஒருவரிடம் இருந்து இவ்வளவு ரன்கள் கிடைக்கிறது என்றால், மேல் வரிசையில் இருந்து சராசரியாக ரன்கள் வந்தால் கூட, அந்த அணி தொடரில் நல்ல நிலையை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக இவர் மொத்தம் 15 போட்டிகளில் விளையாடி 356 ரன்கள் எடுத்திருக்கிறார். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 179, ஆவரேஜ் 89. ஐபிஎல் தொடரை விட இவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் மிக அதிகமான புள்ளி விபரங்கள் இருக்கிறது.

- Advertisement -

தற்போது 17 வது ஐபிஎல் சீசன் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி துவங்க இருக்கின்ற காரணத்தினால், ரிங்கு சிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று பயிற்சியில் ஸ்பின்னர் ஒருவர் வீசிய பந்தை நேராக ரிங்கு சிங் தூக்கி அடித்த பொழுது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவரின் தலையில் அந்தப் பந்து பட்டது.
இதனால் அந்த சிறுவனை வரவழைத்து, பெரிய அடி ஏதாவது பட்டு இருக்கிறதா என்று விசாரித்து, அத்துடன் அவரிடம் மன்னிப்பு கேட்டு, தொப்பியில் கையெழுத்து போட்டு ரிங்கு சிங் கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : “பாஸ்பால்னா என்னன்னு எனக்கு மட்டும் புரிஞ்சிருச்சு.. அதுக்கு மேலதான் நம்பிக்கையே வந்துச்சு” – அஸ்வின் பேட்டி

இயல்பாகவே ரிங்கு சிங் எந்தவித ஈகோவும் இல்லாமல் எளிமையாக இருக்கக்கூடிய நபர். இந்த வீடியோவில் அவர் சிறுவனிடம் பேசுவதில் இருந்தே,அவர் எவ்வளவு நல்ல குணம் கொண்டவர் என்பது புரியும். தற்பொழுது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.